தே.மு.தி.க குதிரை பேர அரசியலுக்கு முடிவு கட்டிய மக்கள்: தேர்தலில் இவர்கள் செய்த சாதனை இதுதான்!?

 

தே.மு.தி.க குதிரை பேர அரசியலுக்கு முடிவு கட்டிய மக்கள்: தேர்தலில் இவர்கள் செய்த சாதனை இதுதான்!?

மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக அதிக வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. 

மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக அதிக வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. 

தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு  இரண்டு கட்டமாக நடைபெற்றது. தமிழகத்தில்  திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சில கட்சிகள்   கூட்டணி அமைத்தது.  அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக போன்ற பெரிய கட்சிகள் இடம் பெற்றிருந்தது. 

bjp

இந்நிலையில் தேர்தல் முடிவுகள்  நேற்று வெளியாகியது இதில் தேசிய அளவில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கிறது. ஆனால்  தமிழகத்தைப் பொறுத்தவரையில் பாஜகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை. இதில் தேமுதிகவுக்கு நான்கு மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் வட சென்னை தொகுதியில் அழகாபுரம் மோகன்ராஜ், கள்ளக்குறிச்சி தொகுதியில் எல்.கே.சுதீஷ், விருதுநகர் தொகுதியில் அழகர்சாமி, திருச்சி தொகுதியில் இளங்கோவன் போட்டியிட்டனர். 

dmdk

கள்ளக்குறிச்சி தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட எல்.கே.சுதீஷ்; 3,21,794 வாக்குகள் பெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட கவுதம சிகாமணி 7,21,713 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனால் சுதீஷ் சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாணிக் தாகூர் 4,70,883 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு எதிராக களமிறங்கிய தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி 3,16,329 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

வட சென்னை தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட அழகாபுரம் மோகன்ராஜ், திமுக சார்பில் போட்டியிட்ட கலாநிதி வீரா சாமியிடம்  தோல்வி அடைந்தார். கலாநிதி  5,90,986 வாக்குகள் பெற்ற நிலையில்,  மோகன்ராஜ் 1,29,468 வாக்குகள் மட்டுமே பெற்று  சுமார் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மண்ணை கவ்வினார். 

 

திருச்சியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட இளங்கோவன் 1,61,999 வாக்குகள் பெற்ற  நிலையில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருநாவுக்கரசர்: 6,21,285 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இருவரது வாக்கு வித்தியாசம் மட்டும் 40 ஆயிரம் ஆகும்.

 

premalatha தே.மு.தி.க குதிரை பேர அரசியலுக்கு முடிவு கட்டிய மக்கள்: தேர்தலில் இவர்கள் செய்த சாதனை இதுதான்!?

இதனால் தேமுதிக தலைமை  படுஅப்செட்டில் இருக்கிறதாம். மதிமுக, கம்யூனிஸ்ட் , பாமக விசிக, போன்ற கட்சிகள் தேர்தலில் தோற்றாலும் களத்தில்  எப்போதும் பணியாற்றுவார்கள். ஆனால்  தேமுதிக அரசியல் சமயத்தில் மட்டுமே வந்து தலைகாட்டுகிறது. குறிப்பாகக் குதிரை பேர  அரசியலில் மட்டுமே ஈடுபடுகிறது. அதன் விளைவு தான் தேமுதிகவுக்கு இந்த தேர்தலில் விழுந்த பலமான  அடி என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.