தேவ் ஆனந்த் தான் காரணம் என்று எழுதிவைத்து தற்கொலை செய்த நடிகை வைஷ்ணவி… விடுதலை செய்த நீதிமன்றம்… சோகத்தில் உறவினர்கள்!

தேவ் ஆனந்த் தான் காரணம் என்று எழுதிவைத்து தற்கொலை செய்த நடிகை வைஷ்ணவி… விடுதலை செய்த நீதிமன்றம்… சோகத்தில் உறவினர்கள்!

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து நடிகையாக மாறியவர் வைஷ்ணவி. ரஜினிகாந்த்தின் பாபா உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் கடந்த 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். வைஷ்ணவியை தற்கொலைக்குத் தூண்டியதாக பிரபல சீரியல் நடிகர் தேவ் ஆனந்தை போலீசார் கைது செய்தனர்.

vaishnavi

தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை செய்தபோது வைஷ்ணவிக்கும் தேவ் ஆனந்த்துக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. தேவ் ஆனந்து ஏற்கனவே திருமணம் ஆனவர். இந்தநிலையில், வைஷ்ணவியை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொள்ள தேவ் ஆனந்த் விரும்பியுள்ளார். ஆனால், தேவ் ஆனந்தின் ஆசையை வைஷ்ணவி நிராகரித்துவிட்டதாக கூறப்பட்டது. ஆனால், வைஷ்ணவியை விடாமல் தொந்தரவு செய்துள்ளார் தேவ் ஆனந்த். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வைஷ்ணவி தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக வைஷ்ணவி கடிதமும் எழுதி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

dev

இது தொடர்பான வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேவ் ஆனந்துக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து 2011ம் ஆண்டு தேவ் ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், வைஷ்ணவி தற்கொலைக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று கூறியிருந்தார். இதன் அடிப்படையில் அப்போது அந்த தண்டனை நிறுத்திவைக்கப்பட்டது. விசாரணை நீண்டுகொண்டே சென்றது.

chennai

2018ம் ஆண்டு அந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. மகளிர் நீதிமன்றம் விதித்த தண்டனை மற்றும் அபராதத்தை ரத்து செய்த நீதிமன்றம், குற்றத்தை அரசு தரப்பு நிரூபிக்காததால், இந்த வழக்கிலிருந்து தேவ் ஆனந்தை விடுவிப்பதாக அறிவித்தது. தீர்ப்பு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டது. தமிழக அரசு தரப்பில் சரியாக வாதங்கள் எடுத்து வைக்காததே தேவ் ஆனந்த் விடுதலை ஆனதற்கு காரணம். வைஷ்ணவி தன் கைப்பட தேவ் ஆனந்த் தான் காரணம் என்று எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார். அப்படி இருக்கும்போது குற்றவாளி வெளியே நடமாட விடலாமா? எனவே, மேல் முறையீடு செய்து, தேவ் ஆனந்துக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று வைஷ்ணவியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.