தேவையில்லாமல் வெளியே சுற்றினால் 144 தடை கடுமையாக்கப்படும் : முதல்வர் எச்சரிக்கை

 

தேவையில்லாமல் வெளியே சுற்றினால் 144 தடை கடுமையாக்கப்படும் : முதல்வர் எச்சரிக்கை

இருப்பினும் தமிழகத்தில், தினந்தோறும் நூற்றுக் கணக்கான மக்கள் வெளியே சுற்றித்திரிகின்றனர்.

கொரோனாவில் இருந்து மக்களை காக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தில், தினந்தோறும் நூற்றுக் கணக்கான மக்கள் வெளியே சுற்றித்திரிகின்றனர். தடையை மீறி வெளியே சுற்றித் திரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியிருப்பதன் பேரில், போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

TTN

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் ட்ரோன் திட்டத்தை முதல்வர் தொடக்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்,  சமூக விலகலை கடைபிடிக்க தான் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம். அப்படி தடையை மீறி வெளியே வந்தால், 144 தடை இன்னும் கடுமையாக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், தமிழக அரசு ஊழியர்களின் பிடித்தம் செய்யப்படாது என்றும் இந்த மாத இறுதி வரை ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.