‘தேவர் மகன் 2’ படத்தின் அறிவிப்பை வெளியிட்ட கமல் : சில நிமிடங்களில் இந்திய அளவில் டிரெண்டிங்!

 

‘தேவர் மகன் 2’  படத்தின் அறிவிப்பை வெளியிட்ட  கமல் : சில நிமிடங்களில் இந்திய அளவில் டிரெண்டிங்!

‘இந்தியன் 2’ திரைப்படம் முடிந்தவுடன்  ‘தேவர் மகன் 2’ படத்திற்கான வேலைகள் தொடங்கப்படும் என்று நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை: ‘இந்தியன் 2’ திரைப்படம் முடிந்தவுடன்  ‘தேவர் மகன் 2’ படத்திற்கான வேலைகள் தொடங்கப்படும் என்று நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பரதன் இயக்கத்தில் 1992–ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் தேவர் மகன். இப்படத்தில் கமல் ஹாசன்,  சிவாஜி கணேசன், நாசர், ரேவதி, கவுதமி உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்தி, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் கமல் ஹாசன் அளித்துள்ள பேட்டியில்,  இந்தியன் 2’ முடிந்தவுடன் ‘தேவர் மகன் 2’ வேலைகள் தொடங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக கமல் ஹாசன் அறிவித்துள்ளார். அவர் அறிவித்த சில நிமிடங்களில் இந்திய அளவில் டிரெண்டிங்கில் இச்செய்தி இடம்பெற்றது. அவரது ரசிகர்கள் பலரும் அதை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ஏற்கனவே கமல் ஹாசன் கைவசம் `இந்தியன் 2’ மற்றும் ‘சபாஷ் நாயுடு’ ஆகிய 2 படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.