தேள் சாப்பிடும் பிக் பாஸ் ரைசா: முகம் சுளித்த ரசிகர்கள்!

 

தேள் சாப்பிடும் பிக் பாஸ் ரைசா: முகம் சுளித்த ரசிகர்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ரைசா, வித்தியாசமான உயிரினத்தை உண்ணும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ரைசா, வித்தியாசமான உயிரினத்தை உண்ணும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்ற நடிகை ரைசா வில்சனுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட மவுசு. மாடலிங்கில் ஆர்வம் கொண்ட ரைசா, தற்போது திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவரும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மற்றொரு பிரபலமுமான நடிகர் ஹரிஷ் கல்யாணும் ஜோடி சேர்ந்து நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் இளைஞர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

இதையடுத்து, சில படங்களில் கமிட்டாகியுள்ள நடிகை ரைசா, தற்போது வெளிநாடுகளி ஹாலிடே கொண்டாடி வருகிறார். ஹாலிடேவில் இருக்கும் புகைப்படங்களையும் ரைசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

?

A post shared by Raiza Wilson (@raizawilson) on

அதில் தேளை சாப்பிடுவது போன்ற புகைப்படம் ஒன்றை பகிர்ந்தது, ரசிகர்களை முகம் சுளிக்கச் செய்துள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இதெல்லாம் சாப்பிடுவீங்களா ரைசா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.