தேளாய் கொட்டிய ‘ஓலா’ டிரைவர் -‘ஓலா’ டாக்ஸியில் பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம் ..

 

தேளாய் கொட்டிய ‘ஓலா’ டிரைவர் -‘ஓலா’ டாக்ஸியில் பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம் ..

டாக்ஸியில் ஏறியதும் அந்த பெண் காருக்குள்ளிருந்து வந்த ஒரு பத்தி வாசனையை நுகர்ந்து வீசிங் பிரச்சினைக்குள்ளானார்.உடனே அவர் அந்த டிரைவரிடம் அந்த பத்தியை தூக்கி எறியுங்கள் அல்லது அதை நிறுத்துங்கள் ஏனெனில் எனக்கு ஒவ்வாமை பிரச்சினையுள்ளது என்றார்.

தனியார் வண்டிகள் பெருகிவிட்ட இந்த காலத்தில்,அதில் பயணிப்பதால் வரும் துன்பங்களும் பெருகிவிட்டன.
கொல்கத்தாவில் ஒரு ஓலா காரில் பயணம் செய்த ஒரு பெண் பயணி அந்த டிரைவரால் பட்ட கொடுமையை சொல்லி மாளாது.

ola.jpg1

கொல்கத்தா நகரில் 46 வயதான அந்த பெண் விஞ்ஞானி ,சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஓலா டாக்ஸி புக் பண்ணி BT சாலையில் ஏறினார்.அப்போது அதில் ஏற்கனவே இரண்டு பயணிகளிருந்தனர்.டாக்ஸியில் ஏறியதும் அந்த பெண் காருக்குள்ளிருந்து வந்த ஒரு பத்தி வாசனையை நுகர்ந்து வீசிங் பிரச்சினைக்குள்ளானார்.உடனே அவர் அந்த டிரைவரிடம் அந்த பத்தியை தூக்கி எறியுங்கள் அல்லது அதை நிறுத்துங்கள் ஏனெனில் எனக்கு ஒவ்வாமை பிரச்சினையுள்ளது என்றார்.அதற்கு அந்த ஓலா ட்ரைவர் அதெல்லாம் நிறுத்த முடியாதென அவரிடம் வாக்குவாதம் செய்தார்.பிறகு வேறு வழியில்லாமல் அந்த பெண் inhaler மூலம் மருந்தெடுத்துக்கொண்டு வண்டியில் பயணித்தபோது,மற்ற பயணிகளை இறக்கிவிட்ட டிரைவர் இந்த பெண்ணை மட்டும் பல இடங்களில் சுற்றிவிட்டு மூன்று கிலோமீட்டர் தள்ளி இறக்கிவிட்டார்.அதுமட்டுமில்லாமல் பேசியதை  விட அதிகமாக 100 ரூபாய் கேட்டார்.அதற்கு அப்பெண் தரமுடியாதென கூறிவிட்டு இறங்கி வீட்டுக்கு சென்றுவிட்டார்.அதற்கு பிறகு அந்த ஓலா ட்ரைவர் 56 மிஸ்டு   கால் கொடுத்து பணம் கேட்டு டார்ச்சர் செய்தாரென கூறினார்.இது தொடர்பாக அந்த டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசை அனுகபோவதாக அப்பெண் விஞ்ஞானி கூறினார்.