தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐ.ஏ.எஸ் சகாயம்

 

தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐ.ஏ.எஸ் சகாயம்

குறிப்பாக டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் நடந்த முறைகேடு, அரசு தேர்வுகளின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இழக்கச் செய்யும் படி இருக்கிறது.

தமிழகத்தில் நீட் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல தேர்வு முறைகேடுகள் அம்பலமாகி வருகிறது. குறிப்பாக டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் நடந்த முறைகேடு, அரசு தேர்வுகளின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இழக்கச் செய்யும் படி இருக்கிறது. இந்நிலையில், இது குறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.ஏ.எஸ் சகாயம், தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் இளைஞர்களை நிலை குலையச் செய்கிறார்கள். அவர்களைச் சட்டம் முன் நிறுத்தி கடுமையான தண்டனையைக் கொடுக்க வேண்டும் என்று கூறினார். 

ttn

அதனைத்தொடர்ந்து, இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனால் மாணவர்கள் யாரும் அரசு தேர்வு மீது அவநம்பிக்கை கொள்ள வேண்டாம் என்றும் நேர்மையான திறமையுள்ள அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து இந்த முறைகேடுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றும் தெரிவித்தார்.