தேர்வு முறைகேடுகளைத் தவிர்க்க புதிய திட்டம்! – டி.என்.பி.எஸ்.சி சீர்திருத்தம் பலனளிக்குமா?

 

தேர்வு முறைகேடுகளைத் தவிர்க்க புதிய திட்டம்! – டி.என்.பி.எஸ்.சி சீர்திருத்தம் பலனளிக்குமா?

குரூப் 4, குரூப் 2 ஏ தேர்வுகளுக்கு பொது அறிவுத்தாள் தேர்வு மட்டுமே இதுவரை நடந்து வந்தது. இனிவரும் காலங்களில் அத்தேர்வுகள் முதனிலை, முதன்மைத் தேர்வு என இருநிலையாக நடத்தப்படும்.
தேர்வின் போது, தேர்வர்கள் மெய்தன்மையை உறுதி செய்யவும், இதர தேர்வு விதிமுறைகளை அறியவும் 9 மணிக்கே தேர்வு மையத்திற்கு வந்துவிட வேண்டும். காலை 10 மணி முதல் 1 மணி வரை, மூன்று மணி நேரம் தேர்வு நடைபெறும். பத்து மணிக்கு மேல்வரும் எந்த தேர்வர்களும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறவதைத் தவிர்க்க புதிய சீர்திருத்தங்களை அந்த ஆணையம் வெளியிட்டுள்ளது. 
இதன்படி, “குரூப் 4, குரூப் 2 ஏ தேர்வுகளுக்கு பொது அறிவுத்தாள் தேர்வு மட்டுமே இதுவரை நடந்து வந்தது. இனிவரும் காலங்களில் அத்தேர்வுகள் முதனிலை, முதன்மைத் தேர்வு என இருநிலையாக நடத்தப்படும்.
தேர்வின் போது, தேர்வர்கள் மெய்தன்மையை உறுதி செய்யவும், இதர தேர்வு விதிமுறைகளை அறியவும் 9 மணிக்கே தேர்வு மையத்திற்கு வந்துவிட வேண்டும். காலை 10 மணி முதல் 1 மணி வரை, மூன்று மணி நேரம் தேர்வு நடைபெறும். பத்து மணிக்கு மேல்வரும் எந்த தேர்வர்களும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

tnpsc-exam

தேர்வு நேரத்திற்குப் பின்னர் விடைத்தாளில் பதிவு செய்ய வேண்டிய, கூடுதல் விபரங்களுக்காக 15 நிமிடங்கள் ஒதுக்கப்படும். 
மாலை தேர்வுகளிருப்பின் பிற்பகல் 3 மணிக்குத் தேர்வு தொடங்கும்.இனிவரும் கொள்குறிவகை தேர்வுகளில், தேர்வர்கள் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும். 
ஒருவேளை வினாவிற்கு விடையளிக்க வில்லை/ தெரியவில்லை என்றால் அதற்கு கூடுதலாக கொடுக்கப்படும் E என்ற வட்டத்தினை கருமையாக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் மொத்தம் எத்தனை கேள்விகளுக்கு முறையே A, B, C, D மற்றும் E விடைகளை நிரப்பியுள்ளீர்கள் என்ற விவரத்தையும் அதற்காக ஒதுக்கப்பட்ட கட்டங்களில் நிரப்ப வேண்டும்.
எந்தவொரு கேள்விக்கும் A, B, C, D மற்றும் E ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை குறிக்கத் தவறினால், விடைத்தாள் செல்லாததாக்கப்படும். 
தேர்வு முடிந்ததும் ஒவ்வொரு குறிப்பிட்ட நபரின் விடைத்தாள், தேர்வர்களின் விபரங்கள் அடங்கிய பகுதி, விடையளிக்கும் பகுதி ஆகியவற்றை தேர்வர்கள் முன்னிலையிலேயே தனித்தனியே பிரித்துக் காட்டி, தேர்வறையிலேயே சீலிடப்படும். அதன்பின் தேர்வர்களிடம் கையொப்பம் பெறப்படும்.

tnpsc-exam-09

விடைத்தாளை அடையாளம் காணமுடியாத வகையில், விடைத்தாளின் விடையளிக்கும் பகுதியில் தேர்வரின் கையொப்பத்திற்குப் பதிலாக தேர்வரின் இடது கை பெருவிரல் ரேகைப் பதிவு செய்யப்படும். 
தேர்வு மையத்திலிருந்து விடைத்தாள்களை தேர்வாணைய அலுவலகத்திற்கு எடுத்து, வரப் பின்பற்றிய முறை முற்றிலும் மாற்றப்பட்டு, அதற்குப் பதிலாக அதிநவீன ஜி.பி.எஸ், கண்காணிப்பு கேமராவுடன் கூடிய பாதுகாப்பு வாகன ஏற்பாடுகள் செய்யப்படும். 
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நேரலையாக தேர்வாணையத்திலிருந்து கண்காணிக்கப்பட 24 மணி நேரமும் தேர்வாணைய மையத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும்.
தேர்வாணையத்திற்கும் நேர்மையான தேர்வர்களுக்கும் இடையிலான இணைப்பை உறுதி செய்து கொள்ளவும், தேர்வாணையத்தில் சிறப்பு தகவல் தளம் உருவாக்கப்படும். தேர்வர்கள் தங்களுக்குத் தெரியவரும் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளலாம், அவர்கள் குறித்த தகவல்கள் ரகசியம் காக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.