தேர்வு போன வரும் உயிர் போனா வருமா? பெற்றோருக்கு ஜிவி பிரகாஷ் அட்வைஸ்

 

தேர்வு போன வரும் உயிர் போனா வருமா? பெற்றோருக்கு ஜிவி பிரகாஷ் அட்வைஸ்

நீட் தேர்வினால் அச்சமடைந்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. நேற்று ஒரு நாளில் மூன்று மாணவர்கள் நீட் தேர்வு அச்சத்தாலும், மன உளைச்சலாலும் தற்கொலை செய்து கொண்டனர். ஆனாலும் பல்வேறு மாநில அரசுகளின் கோரிக்கையை நிராகரித்துள்ள மத்திய அரசு, இன்று நாடு முழுவதும் நீட் தேர்வை நடத்தியுள்ளது

நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வெற்றியோ தோல்வியோ அத சரி சமமா பார்க்க கத்துக்கோங்க. தோல்வி இல்லாத லைப் இண்ட்ர்ஸ்ட்டா இருக்காது. வாழ்க்கையில பெரிய இடத்துக்கு வரதுக்கு தோல்வி ரொம்ப முக்கியம். இந்த ஒரு பரிட்சைல தோத்தா, வாழ்க்கையில தோத்ததா அர்த்தம் இல்ல. வாழ்க்கை ரொம்ப பெருசு. தற்கொலை எதுக்குமே முடிவு கிடையாது.

இதே நீட் தேர்வுக்காக அனிதாவை இழந்த நாம் இப்போது ஒரே நேரத்தில் மூன்று மாணவர்களை இழந்திருப்பது பெரும் சோகத்திற்கு உரிய நிகழ்வு. #IamTired என ஒரு மாணவி கடிதம் எழுதி விட்டு தற்கொலை செய்து கொள்ள இந்த சமூகமே காரணம். ஒரு தேர்வில் தோற்றால் வாழ்க்கையே முடிந்து விடாது. மாணவர்கள் எல்லாவற்றையும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். குழந்தைகளை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தேர்வு போன வரும் உயிர் போனா வராது. ஒரு தேர்வு உங்களின் குழந்தையின் வாழ்க்கையை தீர்மானிக்காது” என தெரிவித்தார்.