தேர்வு அறையில் சோதிக்கப்பட இருப்பது பாட அறிவு மட்டுமல்ல, நேர்மையும்தான்!

 

தேர்வு அறையில் சோதிக்கப்பட இருப்பது பாட அறிவு மட்டுமல்ல, நேர்மையும்தான்!

தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களை மொத்த வகுப்புக்கும் தெரியும்படியாக எல்லார் முன்னிலையிலும் சொல்லப்போவதில்லையாம். மற்றவர்களைவிட குறைவான மதிப்பெண்களை பெறுவதை மாணவர்கள் அவமானமாக கருதி, காப்பியடிக்க முயற்சிக்கலாம் என்பதால், அவரவர் எடுத்த மதிப்பெண்கள் அவரவருக்கு மட்டுமே தெரியவரும்.

ராஜஸ்தான் கல்லூரி கல்வி அதிகாரிகள் வெளியிட்டுள்ள புதிய வித்தியாசமான‌ அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பயங்கர சலசலப்பு, நேர்மறையாகவும் எதிர்மறையாகவும். இனிமேல், ஒவ்வொரு மாதமும் 29ஆம் தேதி மாணவர்களுக்கு தேர்வு ஒன்று நடத்தப்படும், அனைத்து பாடங்களில் இருந்தும் 20 மதிப்பெண்களுக்கு கேள்விகள் என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். கல்லூரிகளில் மாதத்தேர்வு நடத்துவதில் என்ன வித்தியாசம் இருக்கிறது என்றால், இருக்கிறது. அதாவது, தேர்வு அறையில் தேர்வு எழுதும் மாணவர்கள் மட்டும்தான் இருப்பார்களாம். சூப்பர்வைசர்களோ, சிசிடிவி கேமராக்களோ தேர்வு எழுதுபவர்களை கண்காணிக்காதாம்.

Exam hall without supervision

அட, நிஜமாவே வித்தியசாமே இருக்கே! ஆம். மாணவர்களின் பாட அறிவை சோதிக்கும் தேர்வுகள் ஏராளமாக இருந்தாலும், அவர்களின் நேர்மையை சோதிக்கும் புதிய முயற்சி இது. இந்த தேர்வுக்கும் செமஸ்டர் தேர்வுகளுக்கும் சம்பந்தம் இல்லாவிட்டாலும், இது ஒரு நல்ல முயற்சி. மேற்படி தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களை மொத்த வகுப்புக்கும் தெரியும்படியாக எல்லார் முன்னிலையிலும் சொல்லப்போவதில்லையாம். மற்றவர்களைவிட குறைவான மதிப்பெண்களை பெறுவதை மாணவர்கள் அவமானமாக கருதி, காப்பியடிக்க முயற்சிக்கலாம் என்பதால், அவரவர் எடுத்த மதிப்பெண்கள் அவரவருக்கு மட்டுமே தெரியவரும். நல்ல முயற்சி. இதனை சிறப்பிப்பதும் சீரழிப்பதும் மாணவர்கள் கையில்!