தேர்தல் முடிவுகள் 5 மணி நேரம் தாமதமாகலாம்- தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

 

தேர்தல் முடிவுகள் 5 மணி நேரம் தாமதமாகலாம்- தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

நாட்டின் மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி தொடங்கி, கடந்த 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இந்நிலையில் வாக்குப்பதிவு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி கூறுகையில், “ நாளை காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகளும், 8.30 மணிக்கு  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். வழக்கமாக தேர்தல் முடிவுகள் வாக்கு எண்ணும் நாளன்று மாலையில் வெளியிடப்படும். ஆனால் இந்த தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் கூடுதலாக ஐந்து மணி நேரம் ஆகலாம். ஆக இரவு அல்லது நள்ளிரவில் தான் அதிகாரப்பூர்வ மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது” எனக் கூறினார்.