தேர்தல் முடிவுகள் 23ம் தேதி வெளியாவதில் சிக்கல்…ஒரு சின்ன ட்விஸ்ட்…

தேர்தல் முடிவுகள் 23ம் தேதி வெளியாவதில் சிக்கல்…ஒரு சின்ன ட்விஸ்ட்…

எடப்பாடி கோட்டையில் தொடர்ந்து தாக்குப்பிடிப்பாரா அல்லது வீட்டுக்குப் போவாரா என்று ஜனங்கள் காலண்டரில் இந்த மாத 23ம் தேதிக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்திருக்க, அந்த 23ம் தேதியில் தேர்தலின் கால்வாசி நிலவரம் மட்டுமே தெரியும் என்றும் முழு நிலவரம் தெரிய மேலும் ஒரு நாள் காத்திருக்கவேண்டும் என்று தேர்தல் கமிஷன் சூசகமாக அறிவித்திருக்கிறது.

voting

வழக்கமாக தேர்தல் முடிவுகள் காலை எட்டுமணிக்கு எண்ணத்துவங்கப்பட்டு அடுத்த இரண்டு மணி நேரங்களில் முன்னணி நிலவரம் தெரிந்துவிடும்.ஆனால் இந்த முறை  21 எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கில் ஒவ்வொரு சட்சபைத் தொகுதியிலும் 5 வாக்குப் பதிவு எந்திரங்களின் வி.வி.பேட் எந்திரங்களை பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்தப் பரிசோதனைகள் முடிய சுமார் ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை ஆகலாம் என்கிறார்கள். 

eps and stalin

இதனால் தேர்தல் முடிவுகள்  தொடர்பான முழு விவரமும் தெரியவர, வழக்கத்தைவிட, கூடுதலாக நேரம் தேவைப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வி.வி.பேட் சோதனை மூலம் தேர்தலில் வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்படும் என்றாலும், தேர்தல் முடிவுகள் வெளியாக அதிகபட்சமாக, ஒரு நாள் வரை காலதாமதம் ஆக வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். 

எனவே இனி எட்ப்பாடியாரை வீட்டுக்கு அனுப்புவதை, மு.க.ஸ்டாலின் அவர்களை முதல்வர் நாற்காலியில் அமரவைத்து அழகு பார்ப்பதை 23ம் தேதியிலிருந்து 24ம் தேதிக்கு மாற்றீக்கொள்ளும்படி வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறோம்.