தேர்தல் முடிவுகளை வெளியிடத் தாமதம்.. திமுக நீதிமன்றத்தில் முறையீடு !

 

தேர்தல் முடிவுகளை  வெளியிடத் தாமதம்.. திமுக நீதிமன்றத்தில் முறையீடு !

எடப்பாடி, சங்ககிரி, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் முடிவுகளை வெளியிடத் தாமதம் ஆகிறது என்று திமுக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர் மாவட்ட குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு 4 வகையான வாக்குச்சீட்டுகளின் எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ttn

இந்நிலையில், எடப்பாடி, சங்ககிரி, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் முடிவுகளை வெளியிடத் தாமதம் ஆகிறது என்று திமுக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதனைக் கேட்ட நீதிபதிகள் இது குறித்து இன்று விசாரணை நடத்த வாய்ப்பில்லை என்றும் நாளை இதனைப் பற்றி விசாரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

ttn

அதனைத் தொடர்ந்து, இது குறித்து விசாரணை மேற்கொள்ள அதனை மனுவாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மனுத்தாக்கல் நடைமுறைகள் முடிந்தால் நாளை காலை நீதிமன்றத்தில் முறையிடுங்கள் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், தேர்தல் முடிவுகளின்  தாமதம் குறித்து அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு வழக்கின் ஆவணங்களை முன்னரே கொடுக்கு வேண்டும் என்றும் நாளை மதியம் இந்த முறையீடு தலைமை நீதிபதியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பிறகே விசாரிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.