தேர்தல் முடிந்துவிட்டதால், நீங்கள் தேடும் ‘நமோ டிவி’ இப்போது உபயோகத்தில் இல்லை

 

தேர்தல் முடிந்துவிட்டதால், நீங்கள் தேடும் ‘நமோ டிவி’ இப்போது உபயோகத்தில் இல்லை

பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரத்திற்கென்றே பாஜகவால் பிரத்யேகமாக‌ உருவாக்கப்பட்ட ‘நமோ டிவி’ சேனல், தேர்தல் முடிந்தவுடன் அதன் ஆயுளை நிறுத்திக்கொண்டது

பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரத்திற்கென்றே பாஜகவால் பிரத்யேகமாக‌ உருவாக்கப்பட்ட ‘நமோ டிவி’ சேனல், தேர்தல் முடிந்தவுடன் அதன் ஆயுளை நிறுத்திக்கொண்டது. ஏழாவது மற்றும் இறுதிகட்ட தேர்தல் பரப்புரை முடிந்த அன்றே, நமோ டிவி நாட் ரீச்சபுளாகிவிட்டது. எந்த முன்அனுமதியும் பெறாமல், விதிகளை மதிக்காமல், கடந்த மார்ச் 31ஆம் தேதி திடீரென முளைத்த நமோ டிவிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் புகார் அளித்தன.

bjp

புகார் மீது என்ன நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்திருக்கும் என நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை. தேர்தல் ஆணையத்தின் கருத்துப்படி, நமோ டிவி வெறும் விளம்பர சேனலாகும். அதில் அரசியல் நிகழ்ச்சிகள் எதுவும் இடம்பெற அனுமதி இல்லை என்று கூறியிருந்தாலும், பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையின்போது அரசியல் பேசாமல் வேறு என்ன  பேசப்போகிறார்? 

bjp

டாட்டா ஸ்கை, வீடியோகான், டிஷ் டிவி உள்ளிட்டவை தங்கள் இணைப்புகளில் நமோ டிவியை இலவச சேனலாக ஒளிபரப்பின. இப்போது தேர்தல் முடிந்த கையோடு, நமோ டிவி தன் செயல்பாட்டை நிறுத்திக்கொண்டது. பிரதமர் மோடிக்கு எதிராக வைக்கப்பட்ட அனைத்து நடத்தை விதிமீறல்களையும் தேர்தல் ஆணையம் இடதுகையால் தள்ளிவிட்டு டீல் செய்ததில், இந்த நமோ டிவி அனுமதிதான் ஹைலைட். ஆனாலும், நீங்க ரொம்ப நேர்மையாக இருக்கீங்க ஆப்பீசர்