தேர்தல் போல் மது வாங்க வருபவர்களின் ஆள்காட்டி விரலில் அழியா மையால் மார்க்… மத்திய பிரதேச அரசு அதிரடி

 

தேர்தல் போல் மது வாங்க வருபவர்களின் ஆள்காட்டி விரலில் அழியா மையால் மார்க்… மத்திய பிரதேச அரசு அதிரடி

மத்திய பிரதேசத்தில் தேர்தல் போல், மது கடைகளில் மது வாங்க வருபவர்களின் ஆள்காட்டி விரலில் அழியா மையால் மார்க் செய்யப்படுகிறது.

கடந்த 4ம் தேதி முதல் நிபந்தனைகளுக்கு உள்பட்டு மதுகடைகளை திறந்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து பல மாநில அரசுகள் மதுகடைகளை திறந்தன. அதேசமயம் சில மாநிலஙகள் மது வாங்க வருபவர்கள் அடையாள அட்டை கையில் வைத்திருக்க வேண்டும், கையில் குடை வைத்திருக்க வேண்டும் விதவிதமாக உத்தரவிட்டன. மத்திய பிரதேசம் அதிலும் ஒரு படி மேலே போய் வித்தியாசமாக மது வாங்க வருபவர்களின் ஆள்காட்டி விரலில் அழியாத மையால் குறியிடுகிறது.

மது வாங்க வருபவரின் விரலில் அழியா மை வைக்கும் பணியாளர்

மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஹோஷங்காபாத் மாவட்டத்தில்தான் மது வாங்க மதுகடைகளுக்கு வருபவர்களின் விரலில் அழியா மையால் குறியிடப்படுகிறது. இது தொடர்பாக அம்மாவட்ட கலால் அதிகாரி அபிஷேக் திவாரி கூறியதாவது: ஹோஷங்காபாத் மாவட்டத்தில் மது வாங்க மது கடைகளுக்கு வருபவர்களின் ஆள்காட்டி விரலில் அழியா மையால் குறியிடப்படுகிறது. 

மது பாட்டில்களை வாங்கி செல்லும் குடிமகன்

தேவைப்பட்டால் எதிர்காலத்தில் மக்களை கண்டுபிடிப்பதற்காக இநத நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், மது கடைகளில் உள்ள புத்தகத்தில் அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களது பெயர், முகவரி  மற்றும் செல்போன் எண்ணை குறிப்பிட வேண்டும். கட்டுப்படுத்துதல் இல்லாத மண்டலங்களில் 50 மதுக்கடைகள் திறக்கப்பட்டன. எந்தவொரு கடைகளிலும் கூட்ட நெரிசல் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.