தேர்தல் பிரசாரம் செய்த நடிகர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்: இந்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!

 

தேர்தல் பிரசாரம் செய்த நடிகர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்: இந்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!

மம்தாவை ஆதரித்து பிரசாரம் செய்த நடிகர் காஸி அப்துன் நூர் இந்திய நாட்டை  விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்று இந்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

மேற்குவங்கம்:  மம்தாவை ஆதரித்து பிரசாரம் செய்த நடிகர் காஸி அப்துன் நூர் இந்திய நாட்டை  விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்று இந்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

bangaladeshi

ராணி ரஷ்மோனி என்ற புகழ்பெற்ற தொடரில் நடித்தவர் பங்களாதேஷை சேர்ந்த பிரபல நடிகரான காஸி அப்துன் நூர். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்காக, இவர் காங்கிரஸ் வேட்பாளர் சவுகதா ராய்-க்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார். இது தேர்தல் விதிமீறல் என்று  பாஜக புகார் கூறியதையடுத்து அவருடைய விசாவை ரத்து செய்த மத்திய உள்துறை அமைச்சகம் அவரை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது.

bangaladeshi

இதே போல் பங்களாதேஷை சேர்ந்த மற்றொரு நடிகரான,  பெர்டோஸ் அகமது மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார். இதனால் அவருடன் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.  இது குறித்து கருத்து தெரிவித்த நடிகர் பெர்டோஸ் அகமது, பிரசாரம் செய்ததற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். யார் என்று கூட எனக்குத் தெரியாது. நடிகை பாயல் கேட்டுக்கொண்டதால் அவர்களுடன் பிரசாரத்துக்குச் சென்றேன். ஆனால்  அது தவறு என்பதைப் புரிந்து கொண்டேன்’ என்றார். 

இதையும் வாசிக்க:  பிரபல சின்னதிரை நடிகைகள் கார் விபத்தில் பலி: சோகத்தில் திரையுலகம்!