தேர்தல் பிரசாரத்தில் மீண்டும் உளறிக் கொட்டிய பிரேமலதா!

 

தேர்தல் பிரசாரத்தில் மீண்டும் உளறிக் கொட்டிய பிரேமலதா!

அதிமுக கூட்டணியில் நீண்ட இழுபறிக்கு பின்னர் ஐக்கியமான தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்

சென்னை: மக்களவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பிரேமலதா விஜயகாந்த் உளறிக் கொட்டிய சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் களம் நாடு முழுவதும் சூடு பிடித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அரசியல் கட்சித் தலைவர், கூட்டணிக் கட்சி தலைவர்கள் என பலரும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில், அதிமுக கூட்டணியில் நீண்ட இழுபறிக்கு பின்னர் ஐக்கியமான தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட பிரேமலதா, புல்வாமா தாக்குதலை நடத்தியவர் பிரதமர் தான் உளறிக் கொட்டினார். பொதுமக்களும், கட்சி நிர்வாகிகளுகம், கூட்டணி கட்சியினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

premalatha

பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த பிரேமலதா, பாதுகாப்பு படை வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை, அக்கட்சியின் பிரதமரான மோடி தான் நடத்தியது என கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுாரில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளரான பாமக-வின் வைத்தியலிங்கத்தை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட பிரேமலதா, தாம்பரத்தை மையமாக வைத்து, தனி ரயில் முனையம் உருவாக்கப்படும் என்றும், நதிகள் இணைக்கப்படும் என்றும் உறுதி கூறி வாக்கு சேகரித்தார். ஆனால், தாம்பரம் ரயில் நிலையம ஏற்கனவே சென்னையின் மூன்றாவது முனையமாக உள்ள நிலையில், பிரேமலதா மீண்டும் உளறிக் கொட்டியது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

tambaram railway terminal

தாம்பரத்தில் ரூ.40.4 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய ரயில் முனையத்தை ரயில்வே இணை அமைச்சர் ராஜன் கோஹன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திறந்து வைத்து, அந்த்யோதயா விரைவு ரயில் சேவையையும் கொடி அசைத்து தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க

திமுகவில் இணைந்த அதிமுக ஸ்லீப்பர் செல்கள்; வருமான வரித்துறை சோதனையின் பின்னணி?!