தேர்தல் பயிற்சிக்காக வந்த ஆசிரியை மயங்கி விழுந்து பலி

 

தேர்தல் பயிற்சிக்காக வந்த ஆசிரியை மயங்கி விழுந்து பலி

சேலத்தில் தேர்தல் பயிற்சிக்காக வந்த பள்ளி ஆசிரியை நித்யா மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம்: சேலத்தில் தேர்தல் பயிற்சிக்காக வந்த பள்ளி ஆசிரியை நித்யா மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வரும் 18ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. பல்வேறு கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். மறுபுறம் தேர்தலை நடத்த அரசு ஊழியர்களுக்கு சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடி பணிகளில் பெரும்பாலும் ஆசிரியர்களே நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் அதற்கான இரண்டாம் கட்ட பயிற்சி இன்று சேலத்தில் நடைபெற்றது. சேலம் மாவட்டம் தேவானூர் அரசு நடுநிலைப்பள்ளி  ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் நித்யா(34). சேலம் மின்னாம்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நடைபெற்ற பயிற்சியில் அவர் கலந்து கொண்டார். 

அப்போது நித்யா திடீரென்று மயங்கி விழுந்தார்.  இதையடுத்து அங்கிருந்த சக ஆசிரியர்கள்அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே நித்யா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பயிற்சி முகாமில் ஆசிரியை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: என்னை ‘தெர்மாகோல் விஞ்ஞானி’யாக மாற்றியது இவர் தான்? உண்மையை உடைத்த செல்லூர் ராஜு