தேர்தல் தோல்வி! ராஜினாமா செய்த ராகுல்.. ஏற்க மறுத்த காங்கிரஸ்

தேர்தல் தோல்வி! ராஜினாமா செய்த ராகுல்.. ஏற்க மறுத்த காங்கிரஸ்

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, தனது பதவியை ராஜினாமா செய்தார் ஆனால் அதை காங்கிரஸ் காரிய கமிட்டி ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, தனது பதவியை ராஜினாமா செய்தார் ஆனால் அதை காங்கிரஸ் காரிய கமிட்டி ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  

17 ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் இருக்கும் 542 இடங்களில் 350 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. ஆனால் காங்கிரஸ் மீண்டும் படுதோல்வியடைந்துள்ளது. இதையடுத்து அக்கட்சி சார்பில் இன்று டெல்லியில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது காங்கிரஸ் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி, தனது பதவியை ராஜினாமா செய்ய கடிதம் வழங்கியுள்ளார். ஆனால் இதனை காரிய கமிட்டி ஏற்க மறுத்துள்ளதுடன், தேர்தல் பிரசாரத்தில்  ராகுல் சிறப்பாக மேற்கொண்டார் என பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியின் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரமும் ராகுல் காந்திக்கு வழங்கி காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.