தேர்தல் சம்பந்தமாக திமுக தொடர்ந்த வழக்கு – 28ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது

 

தேர்தல் சம்பந்தமாக திமுக தொடர்ந்த வழக்கு – 28ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது

இடைத்தேர்தல் நடக்க இருக்கும் 18 தொகுதிகளுடன் சேர்த்து, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கை வரும் 28 – ஆம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. 

இடைத்தேர்தல் நடக்க இருக்கும் 18 தொகுதிகளுடன் சேர்த்து, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கை வரும் 28 – ஆம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. 

18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் 

தமிழகத்தில் காலியாக இருந்த 21 சட்டப்பேரவை தொகுதிகளில்,  18 தொகுதிகளுக்கு மட்டும் வரும் மக்களவைத் தேர்தலுடன் இணைந்து தேர்தல் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் வழக்கு காரணமாக இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. 

election

ஆனால், மீதமுள்ள மூன்று தொகுதிகளுக்கும் சேர்த்து ஒன்றாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தான் எதிர்க்கட்சிகளின் விருப்பமாக உள்ளது. இதில் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ-வாக இருந்த ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது என சிலநாட்களுக்கு முன்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஒட்டப்பிடாரம் வழக்கையும் புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி வாபஸ் பெற்றார்.

திமுக சார்பில் வழக்கு 

 இதனால்  3 தொகுதிகளில் தேர்தலை நடத்தக் கோரி திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. இந்நிலையில், 21 தொகுதிகளுக்கும் ஒன்றாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நாளைய தினமே வழக்கினை விசாரிக்க வேண்டும் என்று திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு நாளைய தினம் நிறைய வழக்குகள் பட்டியலிட்டிருப்பதால் விசாரிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், வரும் 28 – ஆம் தேதி விசாரிப்பதாக அறிவித்துள்ளனர். 

election

மேலும், சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த கனகராஜ் திடீரென உயிரிழந்தர். அதனால், சட்டப்பேரவையில் காலியாக உள்ள இடங்களில் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

இதையும் படிங்க :

தி.மு.க-விற்கு எதிராக வியூகம் வகுக்கும் மு.க.அழகிரி ! ஆருடம் சொல்லும் அமைச்சர் !?

சுவாரசியமான தேர்தல் களம்: தாண்டியா ஆடிய செல்லூர் ராஜு: தூங்கி வழிந்த அதிமுக எம்பி!