தேர்தல் ஆணையம் மோடியின் கைக்கூலி –  ராகுல்காந்தி சரமாரி பேச்சு

தேர்தல் ஆணையம் மோடியின் கைக்கூலி –  ராகுல்காந்தி சரமாரி பேச்சு

இந்திய தேர்தல் ஆணையம் மோடி செய்யும் செயல்கள் அனைத்திற்கும் ஒத்து ஊதிக் கொண்டு பாரபட்சம் காட்டுவதாகவும், மோடி அரசின் கைக்கூலியாக செயல்பட்டு வருவதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி சரமாரியாக இந்திய தேர்தல் ஆணையத்தை விமர்சித்துள்ளார்.

voting

7ம் கட்ட வாக்குப்பதிவு

இந்தியாவில் 17 ஆவது பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடந்து முடிந்துள்ளது. குறிப்பாக, ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நேற்றைய தினமான ஏப்ரல் 19ம் தேதி பஞ்சாப், மேற்கு வங்கம் மற்றும் உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்று முடிந்தது.

ஏழாம் கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 64.15 சதவீத வாக்குகள் பதிவாகின. அதில் மேற்கு வங்க மாநிலத்தில் அதிகபட்சமாக  73.5 சதவீத வாக்குப் பதிவுகளும், உத்திரப்பிரதேசத்தில் 57 சதவீதமும், பஞ்சாபில் 61 சதவீதமும், பீகார் மாநிலத்தில் 53 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

rahul gandhi

ராகுல்காந்தி விமர்சனம்

நேற்று மாலை சுமார் 6 மணியளவில் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தேர்தல் ஆணையம் குறித்து ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் ஒன்றை முன்வைத்தார்.

ராகுல் காந்தி கூறியதாவது, தேர்தல் விதிமுறை மீறல், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சதி மற்றும் தேர்தல் தேதிகளை மோடிக்காக மாற்றி அமைப்பது என துவக்கத்திலிருந்தே மோடிக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒத்து ஊதி வருகிறது. அதேபோல நமோ டிவியை அனுமதித்ததிலிருந்து, மோடி ஆர்மி, தற்போது கேதார்நாத் எனும் உயரிய நாடகத்தை மோடி அரங்கேற்றியது வரை அனைத்திற்கும் தேர்தல் ஆணையம் மிகவும் பக்கபலமாக உதவி வருகிறது. இவை அனைத்தையும் இந்திய மக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்” என்றார்