தேர்தல் ஆணையத்துக்கு முன்பே தேர்தல் தேதியை கூலாக அறிவித்த முதல்வர் பழனிசாமி?!..

தேர்தல் ஆணையத்துக்கு முன்பே தேர்தல் தேதியை கூலாக அறிவித்த முதல்வர் பழனிசாமி?!..

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 அல்லது 12-ஆம் தேதி நடைபெற வாய்ப்புள்ளதென சேலத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 அல்லது 12-ஆம் தேதி நடைபெற வாய்ப்புள்ளதென சேலத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பேசிய பழனிசாமி, தேர்தல் தேதி குறித்து அறிவித்துள்ளார். ஏப்ரல் 11 அல்லது 12-ஆம் தேதி தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது என்றார். தேர்தல் ஆணையம் தேதியை அறிவித்த ஒரு மாதத்துக்குள் தேர்தல் நடைபெறும், நாளை தேர்தல் அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவித்தார். தேர்தல் ஆணையம் என்பது தன்னிச்சையாக இயங்கக் கூடிய அமைப்பு, அது மத்திய மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் வராது. அப்படியிருக்க பழனிசாமிக்கு எப்படி தேர்தல் குறித்த விஷயங்கள் முன்பே தெரிந்தது என்ற கேள்வி எழுகிறது.

ஏற்கனவே தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் கட்டளைக்கு அடிபணிந்து நடக்கிறது என விமர்சனம் எழுந்து வரும் வேளையில், பழனிசாமி தேர்தல் தேதி பற்றி அறிவித்தது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. மத்திய அரசாங்கத்துக்கு ஆதரவாய் செயல்படும் அத்தனை கட்சிகளிடமும் தேர்தல் ஆணையம் இந்தத் தகவலை பகிர்ந்து கொண்டிருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனினும் கட்சிப் பணிகளை வேகப்படுத்தவே பழனிசாமி அவ்வாறு அறிவித்தார் எனவும் அதிமுக தரப்பினர் சிலர் கூறுகிறார்கள்.