தேர்தலுக்கு நன்றி; 17 ஆண்டுகளுக்கு பின்னர் மின்சார வசதி கிடைத்த பள்ளி!

 

தேர்தலுக்கு நன்றி; 17 ஆண்டுகளுக்கு பின்னர் மின்சார வசதி கிடைத்த பள்ளி!

கோவை மாவட்டத்தில் உள்ளல் அரசு பள்ளி ஒன்றுக்கு 17 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மின் இணைப்பு கிடைத்துள்ளது

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ளல் அரசு பள்ளி ஒன்றுக்கு 17 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மின் இணைப்பு கிடைத்துள்ளது.

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி பகுதியில் உள்ள பெரியநாயக்கம்பாளையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசு நடுநிலை பள்ளி ஒன்று கடந்த 17 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் தடாகம் வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த பள்ளியில் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த சுமார் 47 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். தடாகம் வனப்பகுதிக்குள் அமைந்துள்ள செம்புக்கரை, தூமநூர் மற்றும் கட்டுசாலை கிராமங்களை சேர்ந்த பழங்குடியின மக்களின் குழந்தைகளுக்கு இந்த பள்ளி தான் கல்வி மையமாக இருக்கிறது.

power supply

ஆனால், இந்த பள்ளிக்கு மின் இணைப்பு வசதி இதுவரை செய்து தரப்படாமல் இருந்தது. பள்ளிக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் சூரிய மின் சக்தி இணைப்பு கொடுக்கப்பட்ட போதிலும், மழை மற்றும் குளிர்காலங்களில் போதிய சூரிய ஒளி கிடைக்காததால், மின்விசிறி மற்றும் விளக்குகளுக்கு போதிய எரிசக்தி கிடைக்காமல் இருந்து வந்துள்ளனது.

solar

அதேசமயம், கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு வரை இப்பகுதி மக்கள் சுமார் 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆணைக்கட்டிகு சென்று தான் வாக்களித்து வந்துள்ளனர். இதையடுத்து, 2016 தேர்தலின் போது இந்த பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மின்சாரம் இல்லாததால் ஜெனரேட்டர் வசதியுடன் அப்போது வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மின்சார வசதி இல்லாமல் தேர்தல் நடத்துவது சிரமத்தை ஏற்படுத்தியதாக அந்த சமயத்தில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

power supply

இந்நிலையில், அவ்வாறான சிரமங்களை எதிர்வரவுள்ள தேர்தலின் போது தவிர்க்கும் பொருட்டு, இப்பள்ளிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை மின் இணைப்பு வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என அக்கிராம அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிங்க

இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும் இந்த நடிகைக்கும் திருமணம்?