தேர்தலுக்கு ஆயத்தமாகும் மக்கள் நீதி மய்யம் : கமல் ஹாசனின் பிரச்சார வாகனம் தயார்!

 

தேர்தலுக்கு ஆயத்தமாகும் மக்கள் நீதி மய்யம் : கமல் ஹாசனின்  பிரச்சார வாகனம் தயார்!

சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாவது குறித்து மாவட்ட செயலர்களுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தேர்தலுக்கு ஆயத்தமாகும் மக்கள் நீதி மய்யம் : கமல் ஹாசனின்  பிரச்சார வாகனம் தயார்!

சென்னை தி.நகர் ஜி.ஆர்.டி ஹோட்டலில் கமல்ஹாசன் தலைமையில் மக்கள்நீதிமய்யம் மாவட்ட செயலாளர்கள், மண்டல மற்றும் தொகுதி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. 100 சட்டமன்றத் தொகுதிகளின் நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

தேர்தலுக்கு ஆயத்தமாகும் மக்கள் நீதி மய்யம் : கமல் ஹாசனின்  பிரச்சார வாகனம் தயார்!

ஆலோசனை கூட்டத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, விருதுநகர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் வளர்ச்சி குறித்து நிர்வாகிகளிடம் கமல் ஹாசன் கேட்டறிந்தார்.

தேர்தலுக்கு ஆயத்தமாகும் மக்கள் நீதி மய்யம் : கமல் ஹாசனின்  பிரச்சார வாகனம் தயார்!

தனித்து போட்டியா? கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதா? என்று ஆலோசனையில் கமல் ஹாசன், திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை நிர்வாகிகள் கூட்டத்தில் திட்டவட்டமாக கூறியுள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ள உருவாக்கப்பட்டுள்ள வாகனமும் தயார் நிலையில் உள்ளது.

.