தேர்தலில் ரஜினி வாக்களிக்கவில்லை – ஐயாம் கிரேட் எஸ்கேப்!

 

தேர்தலில் ரஜினி வாக்களிக்கவில்லை – ஐயாம் கிரேட் எஸ்கேப்!

மும்பையில் ஷூட்டிங்கில் இருக்கும் ரஜினிக்கு தபால் வாக்குச்சீட்டு சனிக்கிழமை மாலை 6.45 மணியளவில்தான் சென்று சேர்ந்திருக்கிறது. தபால் வாக்கு செலுத்தவேண்டிய அவகாசம் முடிந்தபிறகுதான், ரஜினிக்கு வாக்குச்சீட்டே போய்ச் சேர்ந்திருக்கிறது. எனவே, தன்னால் இந்த முறை வாக்களிக்க முடியவில்லை.

நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க தகுதியான 3,177 உறுப்பினர்களில் 1045 பேர் தபால்மூலம் வாக்களிக்க கோரியிருந்தார்கள். மும்பையில் தர்பார் பட ஷூட்டிங்கில் இருக்கும் ரஜினியும் தபால் ஓட்டுக்கார‌ர்.  சென்னையில் முகவரி கொண்ட உறுப்பினர்கள் தேர்தல் நாளான்று வெளியூரில் இருக்கும்பட்சத்தில், அவர்கள் தேர்தல் அதிகாரியிடம், தேர்தல் அறிவிப்பு வெளியான ஏழு நாட்களுக்குள் அதற்கான கடிதம் கொடுத்து, வாக்குச்சீட்டுக்களை தபால்மூலம்  பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது நடைமுறை.

Bhagyaraj Vishal

அதன்படி, தபால் வாக்களிக்கும் உறுப்பினர்களுக்கு வாக்கு சீட்டுகள், கடந்த 17ஆம் தேதியே அனுப்பிவைக்கப்பட்டன. தபால் வாக்குகள் பதிவு செய்வதற்கான கடைசி நாள், வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளான சனிக்கிழமை மாலை 5 மணி. ஆனால், மும்பையில் ஷூட்டிங்கில் இருக்கும் ரஜினிக்கு தபால் வாக்குச்சீட்டு சனிக்கிழமை மாலை 6.45 மணியளவில்தான் சென்று சேர்ந்திருக்கிறது. தபால் வாக்கு செலுத்தவேண்டிய அவகாசம் முடிந்தபிறகுதான், ரஜினிக்கு வாக்குச்சீட்டே போய்ச் சேர்ந்திருக்கிறது. எனவே, தன்னால் இந்த முறை வாக்களிக்க முடியவில்லை. தாமதமாக வாக்குச்சீட்டு கிடைத்து வாக்களிக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன், இது நடந்திருக்கக்கூடாது என டிவீட் வெளியிட்டுள்ளார் ரஜினி!