தேர்தலில் போட்டியிட எனக்கு பயமில்லை: விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் அதிரடி

 

தேர்தலில் போட்டியிட எனக்கு பயமில்லை: விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் அதிரடி

தேர்தலில் போட்டியிட எனக்கு எந்த பயமுமில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்தின் மகன் விஜய் பிரபாகரன் கூறியுள்ளார்.

சென்னை: தேர்தலில் போட்டியிட எனக்கு எந்த பயமுமில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்தின் மகன் விஜய் பிரபாகரன் கூறியுள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சமீப காலமாக தீவிர அரசியலில்  இருந்து ஒதுங்கி இருக்கிறார். மேலும் அவர் சிகிச்சைக்காக தற்போது அமெரிக்கா சென்றிருக்கிறார். இதற்கிடையே விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் அண்மை காலமாக தேமுதிக மேடைகளில் தோன்றி வருகிறார். எனவே தேமுதிகவின் எதிர்காலம் இனி விஜயபிரபாகரனின் கைகளில் இருப்பதாக அக்கட்சி தொண்டர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், தேமுதிக வடசென்னை மாவட்டம் சார்பில் புதுவண்ணாரப்பேட்டை சேனியம்மன் கோவில் தெருவில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. இதில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பங்கேற்றார். விழாவில் விஜயபிரபாகரன் நலத்திட்ட உதவி மற்றும் பிரியாணிகளை வழங்கினார். மேலும் ஆதரவற்ற குழந்தைகள் கருணை இல்லத்துக்கு நிதி உதவியும் வழங்கினார். 

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்தபிறகு கூட்டணி குறித்தும், வியூகம் குறித்தும் அறிவிக்கப்படும். தலைவரும், கட்சி தலைமையும் விரும்பினால் எந்த தேர்தலிலும் போட்டியிடுவேன். தேர்தலில் போட்டியிட எந்த பயமும் எனக்கு இல்லை. எங்கள் கட்சிக்குள் குழப்பம் இல்லை. எனது வளர்ச்சிக்கு சுதீப் பக்கபலமாக இருக்கிறார். எனக்கும் அவருக்கும் பிரச்னை இருப்பதாக கூறுவது வதந்தி என்றார்.