தேர்தலில் தோற்றால் அரசியல் துறவறம் – முதல்வர் அதிரடி

தேர்தலில் தோற்றால் அரசியல் துறவறம் – முதல்வர் அதிரடி

நாடாளுமன்ற தேர்தலில் தமது மாநிலம் முழுமைக்கும் பெருவாரியான வெற்றியை பெற்றுத்தர முடியாமல் போனால், மற்றவர்களை கைகாட்டிவிட்டு எஸ்கேப் ஆகாமல், தாமே பொறுப்பேற்று பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங். என்னது பஞ்சாப் முதல்வரா? நான்கூட நம்ம முதல்வரோன்னுல்ல நினைச்சேன் என்பவர்களுக்கு ஐ’ம் வெரி சாரி, நீங்க இன்னும் நம்ம தமிழ்நாட்டு அரசியலை கூர்ந்து கவனிக்கனும் என்பது என் தாழ்மையான அறிவுரை. ஏன்னா, தேர்தல்ல தோத்துட்டா, எடப்பாடியாரே நினைச்சாலும் பதவி தப்பாது.

அமரீந்தர் சிங்

ரைட், இப்ப நம்ம மேட்டருக்கு வருவோம். பத்து வருட இடைவெளிக்குப் பிறகு பஞ்சாபை 2017-ல் காங்கிரஸ் மீட்டெடுத்தது. அதற்கு முன்பாக சிரோன்மணி அகாலி தள் – பாஜக கூட்டணி ஆட்சி 2007லிருந்து 2017 வரை தொடர்ந்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 117 இடங்களில் 77 இடங்களை வென்று பெருவெற்றிப்பெற்ற நம்பிக்கையில் இருக்கும் மிஸ்டர் சிங், தற்போதைய நாடாளுமன்ற தேர்தலிலும் அந்த வெற்றி தொடரும் என நம்பிக்கையோடு இருக்கிறார்.

ஒருவேளை காங்கிரஸ் பஞ்சாபில் மோசமாக தோற்றால், மற்றவர்களை குறைகூறாமல், தாமே பதவி விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இப்படி எல்லாம் நடக்க வாய்ப்பில்லையே என நீங்கள் அவநம்பிக்கை கொள்வது புரிகிறது. அதனால்தான் அமரீந்தரும் ராஜதந்திரமாக வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். காங்கிரஸ் மோசமாக தோற்றால் –  இதில் மோசமாக என்பதுதான் கீ வேர்ட். ஒருவேளை காங்கிரஸ் மோசமாக தோற்றால், “நான் சொன்னது படு மோசம், இது சாதா மோசம்” என எஸ்கேப் ஆவதற்கும் வாய்ப்புண்டு