தேர்தலில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை அவமதிக்காதீர்கள்.. எதிர்க்கட்சிகளுக்குப் பதிலடி கொடுத்த முதல்வர் !

 

தேர்தலில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை அவமதிக்காதீர்கள்.. எதிர்க்கட்சிகளுக்குப் பதிலடி கொடுத்த முதல்வர் !

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெற்றது என்று மட்டும் சொல்லாதீர்கள் என்று பேசினார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நூறுக்கு நூறு சதவீதம் நேர்மையாக நடத்தப்பட்டதாகத் தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்தார். இது தொடர்பாக இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விவாதம் நடைபெற்றது. அதில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெற்றது என்று மட்டும் சொல்லாதீர்கள் என்று பேசினார். இதன் பின்னர், அவையில் கடும் விவாதம் ஏற்பட்டது. துரைமுருகன் கருத்தை எதிர்த்துப் பேசிய அமைச்சர் வேலுமணி, தேர்தல் முறையாகத் தான் நடந்தது. திமுக கட்சியினர் தான் உள்ளே புகுந்து தேர்தல் அதிகாரியை மிரட்டினர் என்று தெரிவித்தார். 

ttn

இரு தரப்பு வாக்குவாதம் முடிந்த பிறகு பேசிய முதல்வர், உள்ளாட்சித் தேர்தலில் எந்த  தவறும் நடக்கவில்லை. இந்த தேர்தலை முழுவதுமாக அரசு ஊழியர்கள் தான் 30 மணி நேரத்திற்கு மேலாக நடத்தினார்கள். அந்த தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறுவது அர்ப்பணிப்புடன் வேலை செய்த அரசு ஊழியர்களை அவமதிப்பது போன்று உள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் கிட்டத்தட்ட 400 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதுவே, தேர்தல் நேர்மையான முறையில் நடந்தது என்பதை விளக்குகிறது என்று எதிர்க்கட்சிகளுக்குப் பதிலடி கொடுக்கும் படி கூறினார்.