தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு; கள்ளக்குறிச்சியில் சுதீஷ் போட்டி!

 

தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு; கள்ளக்குறிச்சியில் சுதீஷ் போட்டி!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்காக தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

சென்னை: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்காக தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மக்களவை தேர்தலுடன் 18 தொகுதிக்களுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற தமிழகத்தின் பிராதன கட்சிகளான திமுக, அதிமுக முனைப்பு காட்டி வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளும், அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

திமுக, அதிமுக, மதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கும் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ளார். அதன்படி, கள்ளக்குறிச்சியில் எல்.கே.சுதீஷ், விருதுநகரில் அழகர்சாமி, திருச்சியில் இளங்கோவன், வடசென்னையில் அழகாபுரம் மோகன் ராஜ் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.