தேனி நிலவரம்: சென்டிமென்டை நம்பும் பெரியாரின் பேரன்!

 

தேனி நிலவரம்: சென்டிமென்டை நம்பும் பெரியாரின் பேரன்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கியிருந்த வீட்டில் தங்கி, ஈவிகேஎஸ்.இளங்கோவன் பிரசாரம்  மேற்கொண்டு வருகிறார். 

தேனி : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கியிருந்த வீட்டில் தங்கி, ஈவிகேஎஸ்.இளங்கோவன் பிரசாரம்  மேற்கொண்டு வருகிறார். 

தமிழக தேர்தல் களம் 

dmk

மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் களம்  சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. தமிழகத்தின் மிகப் பெரிய ஆளுமைகளாக இருந்து வந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரு தலைவர்களும் இல்லாத முதல் தேர்தல் களம்  இது. அதனாலோ என்னவோ, வழக்கத்தை விட இந்த தேர்தல் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது. 

கவனம் பெறும் தேனி தொகுதி 

mgr

குறிப்பாகத் தேனி  மக்களவை தொகுதி இந்த தேர்தலில் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது எனலாம். அதற்குக் காரணம்,  எம்ஜிஆர், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் என்று மூன்று முதல்வர்களை உருவாக்கிய தொகுதி தேனி என்பது தான். கடந்த 1984 இல் எம்ஜிஆர், அவரை தொடர்ந்து 2002, 2004 ஆகிய ஆண்டுகளில் ஜெயலலிதா ஆகியோர் தேனி ஆண்டிபட்டியில்  நின்று வெற்றி பெற்றுள்ளனர்.  அதேபோல் போடியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் நிலைக்கு உயர்ந்தார். 

ஜெயலலிதா சென்டிமெண்ட் 

jaya

அதே போல் ஜெயலலிதா தேனியில்  போட்டியிட்ட காலகட்டத்தில், தேனி என்ஆர்டி. நகரில் உள்ள மினி பங்களாவில் தங்கி தான் பிரசார  வேலைகளைச் செய்து வந்தாராம். அந்த தேர்தலில் ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றார். அதனால் தேனி  தொகுதியையும், இந்த பங்களாவையும்  அதிமுகவினர்  மிகவும் சென்டிமெண்டானகவே நினைக்கின்றனர். 

ஜெயலலிதாவை ஃபாலோ செய்யும் இளங்கோவன்

ela

இந்நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள,  காங்கிரஸ் கட்சியின் தேனி தொகுதி வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஜெயலலிதா தங்கியிருந்த வீட்டை தற்போது வாடகைக்கு எடுத்துத் தங்கியுள்ளார். அங்கிருந்தபடி தான் அவர் தேனியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தை  எதிர்த்துத் தேர்தல் பணிகளை மேற்கொள்ளவிருக்கிறார். 

தேனியில் அமைந்துள்ள இந்த மினி பங்களா ராசியான வீடு என்பதால் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் வெற்றி பெறுவது உறுதி என்று அவரது ஆதரவாளர்கள் கருத்து கூறி வருகின்றனர். ஆனால்  வீடு குறித்த விவரம் தெரிந்த அதிமுகவினரோ இளங்கோவனுக்கு வெற்றி கிட்டி விடுமோ என்ற பதட்டத்தில் உள்ளனர்.

ஆனால்  மற்றவர்கள் என்ன சொன்னாலும், மடமைகளை உடைத்தெறிய தள்ளாத வயதிலும் கம்பீரமாக நின்ற பெரியாரின் பேரனான இளங்கோவனும், இதை நம்புகிறார் என்பது தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் வாசிக்க:  ஜோதிடர் பேச்சை கேட்டு அடுத்தவர் மனைவிக்கு ஆசைப்பட்ட சரவணபவன் ராஜகோபால்: கொலை முதல் கைது வரை வழக்கு கடந்து வந்த பாதை!