தேனி எம்.பியின் கார் தாக்கப்பட்டதை எதிர்த்து சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக,பாஜக உறுப்பினர்கள்!

 

தேனி  எம்.பியின் கார் தாக்கப்பட்டதை எதிர்த்து சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக,பாஜக உறுப்பினர்கள்!

அவரை வழிமறித்த இஸ்லாமியர்கள் 40 பேர் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்ததற்காக, அவர் கார் கண்ணாடியை உடைத்துத் தாக்குதலில் ஈடுபட்டனர்.

கம்பம் அருகே நடைபெறவிருந்த எம்.ஜி.ஆரின் 103 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காகத் துணை முதல்வர் ஓ.பி.எஸ் மகனும் மற்றும் தேனி  எம்.பியும் ஆன ஓ.ப. ரவீந்திரநாத் குமார் நேற்று இரவு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது,அவரை வழிமறித்த இஸ்லாமியர்கள் 40 பேர் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்ததற்காக, அவர் கார் கண்ணாடியை உடைத்துத் தாக்குதலில் ஈடுபட்டனர்.

ttn

உடனே, அங்கு விரைந்து சென்ற போலீசார் தடியடி ரவீந்திரநாத்தை பத்திரமாக மீட்டனர். இது தொடர்பாக 50 இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ttn

இந்நிலையில், ஓ.ப. ரவீந்திரநாத் குமார் சென்ற காரின் மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று கூறி பெரியகுளம் தென்கரை காந்தி சிலை முன் இன்று காலை பாஜகவினரும், அதிமுகவினரும் சாலைமறியலில் ஈடுபட்டனர்.