தேனியில் வீழ்ச்சி அடைந்த சுற்றுலா தொழில்… வண்டிக்கு டீசல் போடக் கூட காசு இல்லாமல் கதறும் 8,000 சுற்றுலா வாகன ஓட்டிகள்!

 

தேனியில் வீழ்ச்சி அடைந்த சுற்றுலா தொழில்… வண்டிக்கு டீசல் போடக் கூட காசு இல்லாமல் கதறும் 8,000 சுற்றுலா வாகன ஓட்டிகள்!

தேனி மாவட்டத்தில் சுற்றுலா தளங்கள் அதிகமாக இருப்பதால் வெளியூரிலிருந்து அங்குச் செல்லும் மக்கள், தேனியைச் சுற்றிப் பார்க்க வருவார்கள்.

தேனி மாவட்டத்தில் சுற்றுலா தளங்கள் அதிகமாக இருப்பதால் வெளியூரிலிருந்து அங்குச் செல்லும் மக்கள், தேனியைச் சுற்றிப் பார்க்க வருவார்கள். அதே போலத் தேனியில் இருக்கும் மக்களும் சுற்றிப் பார்ப்பதற்காக வெளியூர்களுக்குச் செல்வது வழக்கம். சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காகவும் உள்ளூரில் இருக்கும் மக்களுக்காகவும்  8 ஆயிரம் சுற்றுலா வாகனங்கள் அங்கு செயல்பட்டு வந்தன. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சுற்றுலா தொழில் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ttn

இந்த தொழில் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் வேலை வாய்ப்பின்மை, பணப்புழக்கம் சரிவு, தொழில் துறையில் ஏற்பட்ட வீழ்ச்சி உள்ளிட்டவை தான் என்று கூறப்படுகிறது. இதனால் வெளியூரிலிருந்து மக்கள் தேனிக்கு வருவதும் இல்லை , தேனி மக்கள் சுற்றுலாவுக்காக எங்கும் செல்வதும் இல்லை.  இவர்களுக்கு இந்த நெருக்கடி போதாதென்று தமிழக அரசு சார்பிலும் பல நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.

ttn

அதாவது, இன்சூரன்ஸ் மற்றும் லைப் டாக்ஸ் வரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் இவர்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். இது தவிர அவர்கள் பெட்ரோல், டீசல், வாகனம் சர்வீஸ் போன்ற பல நெருக்கடி இருக்கிறது. இதனால் சுற்றுலா வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அவர்களின் வாகனங்களை விற்றுவிட்டு, வேறு வேலைக்குச் சொல்கிறார்களாம். மற்ற சிலர் ஆக்டிங் டிரைவர்களாக பணிபுரிந்து வருகிறார்களாம்.

ttn

இது குறித்துப் பேசிய பேசிய தொழிலாளி, “சொந்த வண்டிகளை வாடகைக்கு விடுபவர்கள் குறைவான கட்டணத்திற்குத் தான் விடுவார்கள். சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்களின் வாகனங்களை எடுத்துச் சென்றால் ஆர்.டி.ஓ , பெர்மிட் எல்லாம் குறைவு. ஆனால், டிராவல்ஸ் வாகனங்களை எடுத்துச் சென்றால்  ஆர்.டி.ஓ , பெர்மிட் எல்லாம் கட்ட வேண்டும். இது மட்டுமில்லாமல், பெட்ரோல், டீசல், லஞ்சம் என்று பல செலவுகள் இருக்கும். இதனால் ஆக்டிங் டிரைவர்கள் அதிகமாகி விட்டனர். 

சுற்றுலா வாகனங்கள் வைத்திருப்பவர்கள் யாருக்கும் வருமானம் கிடைக்காததால் டீசல் போடக் கூட காசு இல்லாமல் தன் சொந்த வாகனங்களை விற்று விட்டு ஆக்டிங் டிரைவர்களாக பல பேர் சென்று விட்டனர். இதற்குத் தமிழக அரசு தான் தகுந்த நடவடிக்கையை எடுத்து எங்களைக் காப்பாற்ற வேண்டும். தேனியில் நாங்கள் மொத்தம் 8,000 டிரைவர்கள் இருக்கிறோம்.” என்று கூறியுள்ளார்.