தேனின் நன்மைகள்! தேனில் இவ்வளவு வெரைட்டி உள்ளதா?! 

 

தேனின் நன்மைகள்! தேனில் இவ்வளவு வெரைட்டி உள்ளதா?! 

இன்றைக்கு பல வெரைட்டிக்களில் தேன் கிடைக்கிறது.செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் தேன்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட ஒரு வைகை பூக்களிலிருந்து தேனீக்கள் மகரந்தத்தைச் சேகரித்து தேன் உற்பத்தி செய்யப்படுவதால்,குறிப்பிட்ட அந்தப் பூக்களின் தமனைக்கு ஏற்ப தேனின் டேஸ்ட்டும் நன்மை தரக்கூடிய சத்துக்களும் மாறும்.ஒவ்வொரு ஊரிலும் ஒரு வகை பூக்கள் என்றால் … என்ன மாதிரியான டேஸ்ட்  இருக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

இயற்கை அளித்த ஒரு உன்னதமான பரிசுதான் ‘தேன்’. தேன் இரண்டடெழுத்து வார்தையைக் கேட்கும்போதே நாக்கில் நீர் சுரக்கும்.அதுமட்டுமன்றி தேன் எனும் வார்த்தையை வைத்து பல பழமொழிகளும் உள்ளன. தெய்வங்களின் அமிர்தம் என்று அழைக்கப்படும்  தேன் நம் முன்னோர்களும் பண்டைய காலத்திலிருந்து உபயோகப்படுத்தப்படும் ஒன்று. தேன் அனைத்து விதமான நன்மைகளையும் தனக்குள் அடக்கிவைத்துள்ளது. இது ஒரு இயற்கை இனிப்பு, சர்க்கரையை தவிர்த்து தேனை வைத்து நீங்கள் பல இனிப்புகளை செய்யலாம். தேன் பல வெரைட்டிகளில் கிடைக்கிறது.

Natural Honey

நம் இந்தியா தேன் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளது. மேற்கு வங்கம், உத்தர பிரதேஷ், உத்தரகாண்ட், பஞ்சாப், கேரளா, கர்நாடகா இதனுடன் தமிழ்நாடும் ஏற்றுமதியில் முன்னிலையில் இருக்கும் மாநிலங்களில் ஒன்று. இங்கு அதிகளவில் தேன்உற்பத்தி செய்யப்படுவதால், இந்தியாவில் குறைவான விலைக்கு தேன் கிடைக்கும். தேனினை நன்கு பார்த்து வாங்கவேண்டும், சூப்பர் மார்க்கெட்டுகளில் செயற்கையாக உற்பத்தி  செய்யப்பட்ட ரெடிமேட் தேனும் கிடைப்பதால் கவனமாகத் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். 

இன்றைக்கு பல வெரைட்டிக்களில் தேன் கிடைக்கிறது. செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் தேன்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட ஒரு வகை பூக்களிலிருந்து தேனீக்கள் மகரந்தத்தைச் சேகரித்து தேன் உற்பத்தி செய்யப்படுவதால்,குறிப்பிட்ட அந்தப் பூக்களின் தன்மைக்கு ஏற்ப தேனின் சுவையும் நன்மை தரக்கூடிய சத்துக்களும் மாறும். ஒவ்வொரு ஊரிலும் ஒரு வகை பூக்கள் என்றால்… என்ன மாதிரியான டேஸ்ட்  இருக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

Honey Bee on Flower

எப்போதுமே காடுகளில் இயற்கையாக கிடைக்கும் தேன்கள் மட்டுமே முதல் தரமாக இருக்கும். இப்போதைய காலங்களில் அதிலும் சர்க்கரைப் பாகுவைக் கலந்து விற்கிறவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். ஸோ,நம்பகமான ஆட்கள் மூலம் வாங்கினால் மட்டுமே ஆரோக்கியமான ஒரிஜினல் தேன் வாங்க முடியும்.
தேன் மனிதனுக்கு பல்வேறு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் என்றாலும் ஒரு வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கு தரக்கூடாது. ஏனெனில், பெரியவர்களுக்கு இருக்கும் எதிர்ப்பு சக்தி குழந்தைகளுக்கு இல்லாததால் இயற்கை தேனில் இருக்கும் சில பாக்ட்ரியாக்களை எதிர்க்க முடியாது.

தேனின் நன்மைகள்:

தேன் இயற்கையான முறையில் வைத்து சாப்பிடுவதே உடலுக்கு நன்மை தரும் நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்க சேர்க்கப்படும் எதுவாக இருந்தாலும் தேனில் இயக்கையாகவே அமைந்துள்ள ஊட்ட சத்துக்களைப் பாதிக்கும். தேனின் இயற்கை தரம் மாறாமல் உபயோகிப்பதால் கிடைக்கும் நன்மைகள் இதோ;

1. தூய தேன் சீக்கிரம் வயதாகுவதிலிருந்து தடுக்கிறது. இதில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிரம்ப உள்ளது குறிப்பாக போலிபினொல் இளமையாக இருக்க உதவும்.

2. இதிலுள்ள ஹைட்ரஜன் பெராக்சைடு ஆன்டிசெப்டிக் ஆக திகழ்கிறது. இது பாக்டீரியல் மற்றும் பன்கல் இன்பெக்க்ஷன்ஸை எதிர்த்து செயல்படும்.

3. தேனில் புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் திறன் உள்ளது. மேலும் தேனிலுள்ள பைட்டோ நியூட்ரியன்ஸ் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

4. தேன் இருமலுக்கு சிறிந்த நிவாரணி. மேலும் இது செரிமான கோளாறுகளை  நீக்கி செரிமானத்தை வலுப்படுத்தும்.

 

தேனின் வெரைட்டிக்கள்: பலருக்கும் தெரியாத தேனின் வெரைட்டிக்கள் உங்களுக்காக…

eucalyptus

யூக்கலிப்டஸ் ஹனி: இது யூக்கலிப்டஸ் பூக்களிருந்து எடுக்கப்படுகிறது. இவ்வகை தேன் ஆஸ்திரேலியாவில் கிடைக்கும். இது தலைவலி, சளி இருக்கும்போது பயன்படுத்தினால் விரைவில் நிவாரணம் பெறலாம். இந்த தேன் மென்தால் டேஸ்ட் உடன் இருக்கும்.

லிச்சி ஹனி: இந்த தேன் அசிடிக் தன்னை கொண்டதும், இதனை வெளியில்வைத்தால் உறையும் தன்மை கொண்டது. மேலும் இது, நல்ல மனமும் அருமையான சுவையும் கொண்டது.

Litchi

சூரியகாந்தி ஹனி: சூரியகாந்தி பூக்களிலிருந்து எடுக்கப்படும்  தேன் அழகிய தங்க நிறம் கொண்டதும், நல்ல சுவை மிகுந்ததாகவும் இருக்கும். இதனை வாங்கி டேஸ்ட் எப்படி இருக்குனு பாருங்க.

ராப் சீட் ஹனி: ராப் ஸீட் பூக்களிருந்து எடுக்கப்பட இந்த தேன் அசத்தலானா சுவை கொண்டது இது உங்கள் தினசரி டீ உடன் கலந்து குடிப்பதற்கு அருமையாய் இருக்கும்.மேலும், இது குறைந்த ஆசிட் அளவை கொண்டுள்ளது. 

கரஞ்சா ஹனி: கரஞ்சா தேன் அதன் பூக்களின் மனத்தை கொண்டு விளங்குகிறது. இந்த தேன் கரஞ்சா/பொன்கமியா எனும் வகை பூக்களிருந்து பெறப்படும் தேன் ஆகும்.

மல்டி பிலோரல் ஹிமாலயன் ஹனி: இந்த தேன் ஹிமாலயாவின் மலைகளிலிருக்கும் பூக்களிலிருந்து பெறப்படும் தேனாகும். இது மருத்துவகுணம் நிரம்ப பெற்றுள்ளது. 

அக்கேசியா ஹனி: இந்த அக்கேசியா தேன் உலகில் அனைவரால் உபயோகிக்கப்படுகிறது குறிப்பாக டயபெட்டிக்  நோயாளிகள் மற்றும் ஸ்வாசக் கோளாறுகள் இருப்பவர்கள் இந்த தேனை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

ஃபாரெஸ்ட் ஹனி: வெஸ்ட் பெங்கால்  மற்றும் ஜார்கன்ட் மாநிலங்களில் இருக்கும் ட்ரோபிகல் காடுகளில் இருக்கும் மூலிகைகள் மற்றும் மரங்களிலிருந்து கிடைக்கும் இந்த தேன் அதிகளவு மருத்துவ குணம் கொண்டு விளங்குகிறது. இது சற்று கருமையை நிறத்தில் இருக்கும் ஆனால் மருத்துவத்தில் அதிக நன்மை பயக்கும் தேன் இந்த காட்டு தேன்.

Forest honey

தேனின் நன்மைகளை தெரிந்தும் நாம் இன்னும் வெள்ளை சர்க்கரையை பயன்படுத்தினால் நாமே நம் தலையில் மண்ணை வாரிபோட்டுக்கொள்வதற்கு சமம்! இனி இயற்கையாக கிடைக்கும் தேனினை பயன்படுத்தி நமது உடல் நலனை பாதுகாப்போம்!