தேடிவர்ற சீதேவியை எட்டி உதைக்க எடப்பாடியால் மட்டும்தான் முடியும்!

 

தேடிவர்ற சீதேவியை எட்டி உதைக்க எடப்பாடியால் மட்டும்தான் முடியும்!

நல்ல நிர்வாகம் என்றால் என்ன செய்திருக்க வேண்டும்? உடனடியாக ஒரு அமைச்சரையும் அதிகாரியையும் கேரளாவுக்கு அனுப்பி, “சேட்டோ இந்த மாதிரி நீங்க 20 லட்சம் லிட்டர் தண்ணீர் குடுக்க முன்வந்ததுக்கு நன்றி, அதை அப்படியே அடுத்த ஒரு மாசத்துக்கு எக்ஸ்டெண்ட் பண்ணுங்க, ஆகுற செலவை நாங்க பாத்துக்குறோம்”னு தானே சொல்லியிருக்கணும்?

சென்னையில் தண்ணீர்ப்பஞ்சம் பற்றி சொல்ல தேவையில்லை.’ நம்மிடம்தான் ஏராளமான தண்ணீர் வளம் இருக்கிறதே, அவசரத்துக்கு உதவலாம்’ என நினைத்த கேரள முதலவர் பினராயி விஜயன், “20 லட்சம் லிட்டர் தண்ணீரை ரயில் மூலம் அனுப்ப தயாராக இருக்கிறோம், அனுப்பலாமா” என அவரது செயலாளர் மூலம் நமது முதல்வரின் செயலாளரிடம் அனுமதி கேட்டிருக்கிறார்.

Pinarayi - Edappaadi

நம்ம முதல்வருக்கு உடம்புக்கு முடியாமல் அப்பல்லோவில் அனுமதியாகி இட்லியும் வேகவைத்த ஆப்பிளும் சாப்பிட்டுக்கொண்டிருப்பதால், உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் இதுகுறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. இதுல விவாதிக்க என்ன இருக்கிறது? உடனே அனுப்புங்கள்னு தானே சொல்லிருக்கணும் என நினைக்கிறீங்களா? அம்மாவின் பொற்கால ஆட்சியில் அங்கதான் இருக்கு ட்விஸ்ட்டு!

TN Reply to Kerala

‘ஒரே ஒருமுறை மட்டும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் அனுப்புவதாக இருந்தால் வேணாம், தினமும் அனுப்புவதாக இருந்தால் பாத்து செய்யுங்க’ என கூலாக பதில் அனுப்பியிருக்கிறார்கள். கடுப்பான பினராயி விஜயன், நாங்க தண்ணீர் தர முன்வந்தோம், தமிழ்நாடு வேண்டாம் என மறுத்துவிட்டது என டிவிட்டரில் ஒரு போஸ்ட் தட்டிவிட்டார். உடனே தமிழக அரசை நெட்டிசன்கள் வறுத்தெடுக்க ஆரம்பித்துவிட்டனர். நல்ல நிர்வாகம் என்றால் என்ன செய்திருக்க வேண்டும்? உடனடியாக ஒரு அமைச்சரையும் அதிகாரியையும் கேரளாவுக்கு அனுப்பி, “சேட்டோ இந்த மாதிரி நீங்க 20 லட்சம் லிட்டர் தண்ணீர் குடுக்க முன்வந்ததுக்கு நன்றி, அதை அப்படியே அடுத்த ஒரு மாசத்துக்கு எக்ஸ்டெண்ட் பண்ணுங்க, ஆகுற செலவை நாங்க பாத்துக்குறோம்”னு தானே சொல்லியிருக்கணும்? ஆனா, இது சம்பந்தமா தமிழக அரசு புதுசா விளக்கம் குடுத்துருக்காங்க. என்னன்னு? முதலமைச்சர் அப்பல்லோவில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்தவுடனேயே அவரிடம் ஆலோசனை கேட்டு முடிவெடுக்கப்படுமாம்!