தேடிவந்த பிரஷாந்த் கிஷோரை தவறவிட்ட எடப்பாடி! – புலம்பித் தவிக்கும் அ.தி.மு.க ஐ.டி விங்

 

தேடிவந்த பிரஷாந்த் கிஷோரை தவறவிட்ட எடப்பாடி! – புலம்பித் தவிக்கும் அ.தி.மு.க ஐ.டி விங்

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில்,தேர்தலும் ஹைடெக்காக மாறிவிட்டது. எல்லோர் கையிலும் ஸ்மார்ட் போன் வந்துவிட்டதால்,தெருத் தெருவாக பிரசாரம் செய்வதைக் காட்டிலும் ஆன்லைனில் பிரசாரம் செய்தால் ஈஸியாக ரீச் ஆகலாம் என்ற எண்ணம் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் வந்துவிட்டது.

பிரஷாந்த் கிஷோரின் முதல் சாய்ஸ் அ.தி.மு.க-வாகத்தான் இருந்தது. ஆனால், எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டதால் தி.மு.க பக்கம் பிரஷாந்த் கிஷோர் சென்றுவிட்டார் என்று அ.தி.மு.க ஐ.டி-விங் தற்போது புலம்பி வருகிறது.
தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில்,தேர்தலும் ஹைடெக்காக மாறிவிட்டது. எல்லோர் கையிலும் ஸ்மார்ட் போன் வந்துவிட்டதால்,தெருத் தெருவாக பிரசாரம் செய்வதைக் காட்டிலும் ஆன்லைனில் பிரசாரம் செய்தால் ஈஸியாக ரீச் ஆகலாம் என்ற எண்ணம் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் வந்துவிட்டது.இதைப் பயன்படுத்தி லாபம் சம்பாதிக்க ஆரம்பிக்கப்பட்ட தேர்தல் பிரசார வியூய அமைப்பு நிறுவனங்கள் காட்டில் தற்போது அடைமழை.

prasanth kishore

பிரஷாந்த் கிஷோரை முதன் முதலில் நரேந்திர மோடிதான் பயன்படுத்தினார்.இரண்டாவது முறையாக குஜராத் முதல்வராக மோடி வெற்றி பெற முடியாது என்ற நிலையை உடைத்துக் காட்டியவர் பிரஷாந்த் கிஷோர்.அதன் பிறகு 2009 நாடாளுமன்றத் தோல்விக்குப் பிறகு பா.ஜ.க மோடியை தூக்கிப் பிடித்தது.மோடிக்கு பின்புலமாக இருந்து செயல்பட்டவர் பிரஷாந்த் கிஷோர். 
மோடி எங்கு பிரசாரம் செய்வதாக இருந்தாலும் அந்த இடம்,மக்கள்,வேட்பாளர் பற்றிய அனைத்து தகவலும் மோடிக்கு சென்றுவிடும்.என்ன பேசினால் மக்களைக் கவர முடியும் என்பது வரை நோட்ஸ் எடுத்து பிரஷாந்த் கிஷோர் ஆட்கள் கொடுத்துவிடுவார்கள்.அதன் அடிப்படையில் பேசி ஸ்கோர் செய்துவிடுவார் மோடி. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க மிகப்பெரிய வெற்றி பெற பிரஷாந்த் கிஷோரின் வியூகம் முக்கிய காரணம்.காங்கிரஸை மிக மோசமான ஊழல் கட்சி என்று காட்டி,குஜராத் வளர்ச்சி மாடல் என்று கூறி,மோடி டீ விற்றார் என்று சொல்லி வாக்குகளை அறுவடை செய்தார்.மோடி பிரதமர் ஆனதும் பிரஷாந்த் கிஷோரை தூக்கி வீசினார்.அதன் பிறகு எதிர்க்கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் அமைக்கும் பணியில் பிரஷாந்த் கிஷோர் இறங்கினார்.
தொடர்ந்து பா.ஜ.க-வுக்கு எதிரான கட்சிகளுக்கு மட்டுமே பிரஷாந்த் கிஷோர் பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில் தமிழகத்தில் தி.மு.க பிரஷாந்த் கிஷோர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.அ.தி.மு.க தரப்பிலிருந்து பிரஷாந்த் கிஷோரை அணுகியதாகவும் அதனால் வேகவேகமாக பிரஷாந்த் கிஷோரை தி.மு.க முடிவு செய்ததாகவும் கூறப்பட்டு வரும் நிலையில், பிரஷாந்த் கிஷோரே எடப்பாடியை அப்ரோச் செய்தார் என்று அ.தி.மு.க ஐ.டி-விங் கொளுத்திப் போட்டுள்ளது.

modi

இது குறித்து அ.தி.மு.க ஐ.டி விங் ஊழியர்கள், “எடப்பாடி பழனிசாமி ஒரு முறை டெல்லிக்கு சென்றபோது அவரை பிரஷாந்த் கிஷோர் சந்தித்தார்.அவரது முதல் சாய்சாக அ.தி.மு.க-தான் இருந்தது.ஆனால்,எடப்பாடி வேறு ஏதோ காரணத்துக்காக வேண்டாம் என்று நிராகரித்துவிட்டார்.தி.மு.க-வுடன் பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் தற்போது டெமோஸ் என்ற நிறுவனத்துடன் அ.தி.மு.க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.இந்த நிறுவனம் தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளது.பிரஷாந்த் கிஷோர் நிறுவனத்தில் பணியாற்றிய இளைஞர்கள் ஒன்று சேர்ந்து இந்த நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.பிரஷாந்த் கிஷோர் அளவுக்கு இவர்களுக்கு அனுபவம் இல்லை. ஆனால் இவர்களுடன் ஒப்பந்தம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது” என்கின்றனர்.
புதிய நிறுவனம் வந்தால் ஐடி-விங் டம்மியாக்கப்படும் என்பதாலும், அனுபவமே இல்லாத டெமோஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டியிருக்குமே என்ற கவலையும் அ.தி.மு.க ஐ.டி-விங் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொள்ளாமல் இருப்பது நல்லது!