தேடிப்போன காதலன் -ஓடிப்போன மனைவி -வாடிப்போன கணவன்… 

 

தேடிப்போன காதலன் -ஓடிப்போன மனைவி -வாடிப்போன கணவன்… 

பெங்களூருவில் சின்னப்பனஹள்ளி பகுதியை சேர்ந்த 29 வயது ராகுல் என்ற நபர் தனது 27 வயது காஷிஷ் என்ற மனைவி மீது 2.4 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை பணத்துடன் முன்னாள் காதலனை தேடி ஓடிவிட்டதாக புகார் கொடுத்துள்ளார்

பெங்களூருவில் சின்னப்பனஹள்ளி பகுதியை சேர்ந்த 29 வயது ராகுல் என்ற நபர் தனது 27 வயது காஷிஷ் என்ற மனைவி மீது 2.4 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை பணத்துடன் முன்னாள் காதலனை தேடி ஓடிவிட்டதாக புகார் கொடுத்துள்ளார் .

software

பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராக பணிபுரியும் 29 வயது ராகுல் என்பவர் காஷிஷ் என்ற ஹரியானா பெண்ணுடன் ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். அவர்களிருவரும் சின்னப்பஹள்ளி பகுதியில் வசித்து வந்தனர். ஆனால் திடீரென பிப்ரவரி மாதம் 21ம் தேதி அவரது மனைவி வீட்டிலிருந்த 2.4 லட்சம் பெறுமான நகை பணத்துடன் சொந்த ஊருக்கு ஓடிவிட்டார் .
இதுபற்றி அவரது கணவர் ராகுல் கூறுகையில், தனது மனைவிக்கு திருமணத்திற்கு முன்பே ஒரு காதலிருந்ததாகவும், அவரோடு சேர்ந்து எடுத்த பல போட்டோக்களை தான் பார்த்ததாகவும் கூறினார். மேலும் அந்த காதலனோடு சேர்ந்து வாழ அவர் தன்னுடைய வீட்டிலிருந்த நகை பணத்துடன் ஓடிவிட்டதாக கூறினார். போலீசில் அவர் அவரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் மீது புகாரளித்துள்ளார். போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் .