தேசிய மக்கள்தொகை பதிவு அதிகாரிகளிடம் உங்க பெயரை ரங்கா பில்லான்னு பொய் சொல்லுங்க….. அருந்ததி ராய் அட்வைஸ்….

 

தேசிய மக்கள்தொகை பதிவு அதிகாரிகளிடம் உங்க பெயரை ரங்கா பில்லான்னு பொய் சொல்லுங்க….. அருந்ததி ராய் அட்வைஸ்….

தேசிய மக்கள்தொகை பதிவு கணக்கெடுப்புக்காக வரும் அதிகாரிகளிடம் உங்க பெயரை ரங்கா பில்லான்னு மாத்தி சொல்லுங்க என அருந்ததி ராய் அறிவுரை சொல்லியுள்ளார்.

[22:28, 12/25/2019] Gps: தேசிய மக்கள்தொகை பதிவேடு என்பது நம் நாட்டில் குடியிருப்போர் தொடர்பான  விவரங்களை பராமரிப்பதுதான். 2010ம் ஆண்டில் முதல்முறையாக தேசிய மக்கள்தொகை பதிவேடு நடைமுறைக்கு வந்தது. நாட்டின் வழக்கான ஒவ்வொரு குடியிருப்பாளரின் விரிவான அடையாளங்களுடன் கூடிய தகவல் தளத்தை உருவாக்குவதே இந்த தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் நோக்கம். கடைசியாக 2015ல் தேசிய மக்கள்தொகை பதிவேடு பதிவு நடந்தது.

தேசிய மக்கள்தொகை பதிவேடு

2020 ஏப்ரலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனுடன் சேர்த்து தேசிய மக்கள்தொகை பதிவேடு தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. எதிர்க்கட்சிகள் வழக்கம் போல் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான தகவல்களை பெற தேசிய மக்கள்தொகை பதிவேடு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என அவை குற்றச்சாட்டி வருகின்றன.

தேசிய குடிமக்கள் பதிவேடு

இந்நிலையில், எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அருந்ததி ராய் தேசிய மக்கள்தொகை பதிவேடுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட அருந்ததி ராய் பேசுகையில், தேசிய மக்கள்தொகை பதிவேடு அதிகாரிகள் உங்கள் வீட்டுக்கு வருவார்கள், உங்களது பெயர்,மொபைல் எண் கேட்பார்கள் மற்றும் ஆதார் மற்றும் டிரைவர் உரிமம் போன்ற சான்றிதழ்களை அவர்கள் கேட்பார்கள். தேசிய மக்கள்தொகை பதிவு தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான தரவாக மாறிவிடும்.

காஷ்மீர்

நாம் அதற்கு எதிராக போராட வேண்டியது அவசியம் மற்றும் ஒரு திட்டமும் இருக்க வேண்டும். தேசிய மக்கள்தொகை பதிவு அதிகாரிகள் வந்து உங்களிடம் பெயர் கேட்கும்போது வித்தியாசமான பெயரை சொல்லுங்கள்.  ரங்கா பில்லா, குங் பு குட்டா என வித்தியாசமான 5 பெயர்களை நாங்கள் தேர்வு செய்துள்ளோம். முகவரி கேட்டால்  நம்பர் 7, ரேஸ் கார்ஸ் சாலை என சொல்லுங்கள். நிறைய தாழ்த்தல்கள் தேவைப்படுகிறது. லத்திகளையும், புல்லட்களையும் எதிர்கொள்ள நாம் பிறக்கவில்லை என தெரிவித்தார். அருந்ததி ராய் இது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசுவது இது முதல் முறையல்ல. கடந்த 2010ம் ஆண்டில், காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி இல்லை என்று பேசினார். இதனையடுத்து டெல்லி போலீசார் அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.