தேசிய கொடியும் கருணாநிதியும்… 

 

தேசிய கொடியும் கருணாநிதியும்… 

மாநிலத்துக்குத் தனி கொடி வேண்டும் என்ற போராட்டத்தை முதலில் தொடங்கியவர் கருணாநிதி. அதன் முடிவாகத்தான், சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியேற்றும்உரிமையை மாநில முதலமைச்சர்களுக்குத் தர வேண்டுமென அப்போதைய பிரதமர் இந்திராவிடம் கோரினார்.

தேசிய கொடியும் கருணாநிதியும்… 

மாநிலத்துக்குத் தனி கொடி வேண்டும் என்ற போராட்டத்தை முதலில் தொடங்கியவர் கருணாநிதி. அதன் முடிவாகத்தான், சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியேற்றும்உரிமையை மாநில முதலமைச்சர்களுக்குத் தர வேண்டுமென அப்போதைய பிரதமர் இந்திராவிடம் கோரினார். அதை இந்திராகாந்தியும் ஏற்றதன் விளைவாகவே, சுதந்திர தினத்தன்று முதலமைச்சர்களும், குடியரசு தினத்தன்று ஆளுநர்களும் தேசியக் கொடியேற்றுகின்றனர். 

மாநிலங்களுக்கான உரிமையைப் பறைசாற்றும் வகையில், தற்போது தனிக் கொடி உருவாக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. இதற்கு வித்திட்டவர் கருணாநிதிதான். அதாவது 1970லேயே இதுபற்றி பேசியிருக்கிறார் கருணாநிதி. அதன்படி, அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லியில் பத்திரிகையாளர்கள் முன், தமிழக அரசின் கொடி எப்படி இருக்கும் என்று‌, தான் வடிவமைத்த மாதிரியை வெளியிட்டார் கருணாநிதி. இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படாத நிலையில், சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை முதலமைச்சர்களுக்கு வழங்க வேண்டும் என்று குரல் கொடுக்கத் தொடங்கினார். இதன் வி‌ளைவாகவே, சுதந்திர தினத்தன்று மாநிலங்களில்

karunanidhi

முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை வழங்கினார் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி.