தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு ஆவணங்கள் தேவையில்லை.. மத்திய அரசு விளக்கம் !

 

தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு ஆவணங்கள் தேவையில்லை.. மத்திய அரசு விளக்கம் !

தேசிய குடிமக்கள் பதிவேடு நடவடிக்கையை நாடு முழுவதும் செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

தேசிய குடிமக்கள் பதிவேடு நடவடிக்கையை நாடு முழுவதும் செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கான குடியுரிமை சட்டத் திருத்தம் சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ttnn

இந்தியாவில் வாழும் எந்த மக்களுக்கும் இந்த சட்டத் திருத்தத்தினால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர், யாரெல்லாம் இந்தியக் குடிமக்கள், யாருக்கெல்லாம் குடியுரிமை வழங்கப்படும் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்தார். அதில், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) நடவடிக்கையின் போது இந்தியக் குடிமக்கள் என்பதை உறுதி செய்யப் பிறந்த தேதி மற்றும் பிறந்த இடம் தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்திருந்தார். இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. 

TTN

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், மக்கள் தொகை கணக்கெடுப்பு கடைசியாகக் கடந்த 2010 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அதன் பின்னர், 2015 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. அதனால்,  2021 ஆம் ஆண்டு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அதற்கு ஆவணங்களைக் காட்ட வேண்டும் என்று வெளியான தகவல் உண்மையல்ல. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது மக்கள் எந்த ஆவணங்களையும் காட்ட வேண்டியதில்லை. ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் 6 மாதமோ அல்லது அதற்கு அதிகமான காலமாகவோ இருந்தால் அவர் குடிமகனாகக் கருதப்பட்டு என்.ஆர்.சி பட்டியலில் தகவல்கள் சேர்க்கப்படும் என்று விளக்கம் அளித்துள்ளது.