தேசிய கீதம் இசைத்து முடிந்ததும் ஜனாதிபதி ராம்நாத் செய்த வேலை! ஆச்சர்யத்தில் போலீசார்!

 

தேசிய கீதம் இசைத்து முடிந்ததும் ஜனாதிபதி ராம்நாத் செய்த வேலை! ஆச்சர்யத்தில் போலீசார்!

பொதுவாக எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், தேசிய கீதம் இசைத்து முடிந்ததும் ஜனாதிபதி உடனடியாக அங்கிருந்து சென்று விடுவது வழக்கம்.  சமீபத்தில் டெல்லியில் நடைப்பெற்ற தேசிய கார்ப்பரேட் சமூக பொறுப்பு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிகழ்வில், கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு பிரிவில் சிறந்த பங்காற்றிய நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கினார்.

பொதுவாக எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், தேசிய கீதம் இசைத்து முடிந்ததும் ஜனாதிபதி உடனடியாக அங்கிருந்து சென்று விடுவது வழக்கம்.  சமீபத்தில் டெல்லியில் நடைப்பெற்ற தேசிய கார்ப்பரேட் சமூக பொறுப்பு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிகழ்வில், கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு பிரிவில் சிறந்த பங்காற்றிய நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, பாதுகாப்பு பணிக்காக முன்வரிசையில் நின்றிருந்த டெல்லி பெண் காவலர் ஒருவர் அதிக சோர்வால் தரையில் விழுந்து, பின்பு எழுந்தார். 

ramnath govind

தேசிய கீதம் இசைத்து முடிந்த பின்னர் மந்திரிகள் நிர்மலா சீதாராமனுடன் பேசிய ஜனாதிபதி கோவிந்த் தனது காவலர்களுடன் மேடையில் இருந்து இறங்கி அதிக சோர்வால் கீழே விழுந்த பெண் காவலரிடம், உடல்நலம் பற்றி விசாரித்தார். ஜனாதிபதி பெண் காவலரை நலம் விசாரித்த போது, உடன் இருந்த மந்திரி அனுராக் தனது கையில் வைத்திருந்த குடிநீர் பாட்டிலைக் கொடுத்தார். அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவரை பெண் காவலருக்கு உதவி செய்யும்படி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டார். தேசிய கீதம் இசைத்து முடித்ததும் வழக்கமாக கிளப்பி விடும் ஜனாதிபதி, அப்படி கிளம்பிச் செல்லாமல், மயங்கி விழுந்த பெண் காவலரின் உடல்நலம் பற்றி அவர் விசாரித்தது அறையில் இருந்தோரையும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.