தேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசு தலைவருடன் சந்திப்பு: ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு

 

தேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசு தலைவருடன் சந்திப்பு: ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு

டெல்லியில் இன்று கூடிய தேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள் நாளை குடியரசுத் தலைவரை சந்திக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

டெல்லி: டெல்லியில் இன்று கூடிய தேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள் நாளை குடியரசுத் தலைவரை சந்திக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் இன்று மாலை தேசிய எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சந்திர பாபு நாயுடு, மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, சரத் பவார், இடதுசாரிகள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்று ஆலோசித்தனர்.

விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தேசிய அளவில் எப்படிப்பட்ட கூட்டணியை உருவாக்குவது, பாஜகவை எவ்வாறு வீழ்த்துவது உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

mamta

இதற்கிடையே, ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்து வந்த உர்ஜித் பட்டேல், தன் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார். இதுகுறித்தும், எதிர்க்கட்சி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கூட்டத்திற்குப் பின் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், “நாட்டில் பொருளாதாரத்தில் நிலைத்தன்மையில்லாத சூழல் ஏற்பட்டுள்ளதால் குடியரசுத் தலைவரை சந்திக்கவுள்ளோம். உர்ஜித் பட்டேல் ராஜினாமா நாட்டிற்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று கூடிய எதிர்க்கட்சித் தலைவர்கள், நாளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேச இருப்பதாக தெரிவித்துள்து குறிப்பிடத்தக்கது.