தேசிய அளவில் அஜித் ரசிகர்கள் செய்த சாதனை! தல’னா சும்மாவா… 

 

தேசிய அளவில் அஜித் ரசிகர்கள் செய்த சாதனை! தல’னா சும்மாவா… 

இந்த விஞ்ஞான உலகில் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதனை உடனே ட்ரெண்டாக்கி பலருக்கும் தெரியப்படுத்தி விட ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வளைய தளங்கள் பயனுள்ளதாக உள்ளது. அதில் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் எதாவது ஒரு நிகழ்வு நடைபெற்றால் ட்விட்டரில் ஹாஸ் டாக் பயன்படுத்தி அதை பதிவு செய்து வைரல் செய்கின்றனர். 

அதுமட்டுமின்றி ட்விட்டரில் அவ்வப்போது ஹாஸ் டாக் மூலம் அஜித்- விஜய் ரசிகர்கள் மோதிக் கொள்கின்றன. தற்போது தான் அந்த சண்டை ஓய்ந்து இருக்கும் நிலையில் அஜித்தின்  ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இந்திய அளவில் ட்ரெண்டான டாப் 5 ஹேஸ்டேக்குகள் என்னென்ன என்பதை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

In India, here were the top 5, most used hashtags from Jan 1 – Jun 30.

1. #Viswasam
2. #LokSabhaElections2019
3. #CWC19
4. #Maharshi
5. #NewProfilePic #HashtagDay#हैशटैगदिवस
— Twitter India (@TwitterIndia) August 23, 2019

அதில் தல அஜித் நடிப்பில் இந்த வருடம் வெளியான விஸ்வாசம் (#Viswasam ) முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் 2019ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தல் (#LokSabhaElections2019 ) இருக்கிறது. மூன்றாம் இடத்தை கிரிக்கெட் உலகக் கோப்பையும் (#CWC19 ), நான்காம் இடத்தை மஹரிசி படமும் (#Maharshi ) பிடித்துள்ளது.  5ஆம் இடத்தில் புதிய முகப்பு புகைப்படம் (#NewProfilePic ) உள்ளது. இதை தற்போது அஜீத் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.