தேசியத்துக்காக மனிதத்தை விற்க மாட்டேன்: நான் ஒரு பாகிஸ்தானி, புல்வாமா தாக்குதலுக்கு என் கண்டனம்

தேசியத்துக்காக மனிதத்தை விற்க மாட்டேன்: நான் ஒரு பாகிஸ்தானி, புல்வாமா தாக்குதலுக்கு என் கண்டனம்

பாகிஸ்தான் பத்திரிகையாளர் செஹ்ர் மிர்சா, போர் மற்றும் தீவிரவாதத்துக்கு எதிராக நான் ஒரு பாகிஸ்தானி, புல்வாமா தாக்குதலுக்கு என் கண்டனம் என பதாகை தாங்கிய புகைப்படத்தை வெளியிட்டது வைரலாகி பல பாகிஸ்தானிகள் அதுபோல் பதிவு செய்துள்ளனர்.

Pakistan journalist sehyr mirza

sehyr

காஷ்மீர், கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி புல்வாமா மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40-க்கும் அதிகமான சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது எனும் தீவிரவாத இயக்கம் நடத்திய இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என சிலர் ஆவேசமாக பதிவு செய்து வந்தார்கள். இந்நிலையில் பாகிஸ்தான் பத்திரிகையாளர் செஹ்ர் மிர்சா, இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனத்தை பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து பலரும் தீவிரவாத செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து செஹ்ர் மிர்சா, நான் தேசியத்துக்காக மனிதத்தை விற்க மாட்டேன். போர் எங்கு நடந்தாலும் அது உலக அமைதியை அச்சுறுத்தக் கூடியது என தெரிவித்துள்ளார்.