தேசத்தின் பொறுமையை சோதிக்கிறார்கள் நிர்பயா வழக்கு குற்றவாளிகள்…… உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்…..

 

தேசத்தின் பொறுமையை சோதிக்கிறார்கள் நிர்பயா வழக்கு குற்றவாளிகள்…… உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு  வாதம்…..

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தேசத்தின் பொறுமையை சோதிக்கிறார்கள் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் செய்தது.

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரும் ஒருவர் பின் ஒருவராக நீதிமன்றங்களில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்து தங்களது தண்டனை நிறைவேற்றுவதை தள்ளிபோட்டு வந்தனர். இந்நிலையில் குற்றவாளிகள் 4 பேரையும்  பிப்ரவரி 1ம் தேதியன்று (நேற்று) தூக்கிலிட நீதிமன்றம் புதிய டெத் வாரண்ட் பிறப்பித்தது. இதிலிருந்தும் தப்பிக்கும் நோக்கில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், தனது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து, நீதித்துறை மறுஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். உச்ச நீதிமன்றம் நேற்று அதனை ரத்து செய்தது. நிர்பயா வழக்கில் மற்றொரு குற்றவாளியான அக்சய் தாக்கூர் தாக்கல் செய்த  curative மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தூக்கு தண்டனை

நிர்பயா வழக்கில் மற்றொரு குற்றவாளியான வினய் குமார் சர்மா கடந்த சில தினங்களுக்கு முன் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி குடியரசு தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து நீதிமன்றம் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும்வரை குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட கூடாது என உத்தரவிட்டது. இந்த சூழ்நிலையில் வினய் குமாரின் கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்தார். அதற்கு அடுத்த சில மணி நேரங்களில் மற்றொரு குற்றவாளியான அக்சய் தனது தூக்கு தண்டனையை ரத்துக் செய்யக்கோரி குடியரசு தலைருக்கு கருணை மனு தாக்கல் செய்தார்.

டெல்லி உயர் நீதிமன்றம்

இதற்கிடையே நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கலிடுவதற்கு டெல்லி நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று விசாரித்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், நிர்பயாக வழக்கு குற்றவாளிகள் தேசத்தின் பொறுமையை சோதிக்க முயற்சி செய்கிறார்கள். 2019 ஹைதராபாத் கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் குற்றவாளிகள் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர் அதனை மக்கள் கொண்டாடினர். இது குற்றவியல் நீதி வழங்கும் அமைப்பின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருவதை வெளிப்படுத்துகிறது எனவும் குறிப்பிட்டு பேசினார். மத்திய அரசு மற்றும் குற்றவாளிகள் தரப்பு  வாதங்களையும் கேட்ட டெல்லி உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.