தேங்காய் எண்ணெய் திருட உதவிய காவல் ஆய்வாளர்: திடுக்கிட வைக்கும் சம்பவம்!

 

தேங்காய் எண்ணெய் திருட உதவிய காவல் ஆய்வாளர்: திடுக்கிட வைக்கும் சம்பவம்!

தேங்காய் எண்ணெய் பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்திற்கு காவல் ஆய்வாளர் ஒருவர் உடந்தையாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி: தேங்காய் எண்ணெய் பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்திற்கு காவல் ஆய்வாளர் ஒருவர் உடந்தையாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி வழியாகக் கோவையில் இருந்து ஆந்திராவிற்குக் கொண்டு சென்ற 40,00,000 ரூபாய் மதிப்புடைய தேங்காய் எண்ணெய் லாரி, கடந்த அக்டோபர் மாதம் 21ம் தேதி அதிகாலையில் தொப்பூர் அருகே தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இந்தத் தீவிபத்தில் அவ்வழியாக வந்த இரண்டு கார்கள் மற்றும் கேஸ் டேங்கர் லாரி உள்ளிட்டவையும் சிக்கி எரிந்தன. இந்த விபத்தின் போது, தேங்காய் எண்ணெய் லாரியிலிருந்து, முக்கால் பங்கு லோடுகளை தீ விபத்தில் இருந்து மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட எண்ணெய் பாட்டில்களை காவல் ஆய்வாளர் உதவியோடு, அங்கிருந்து மறைத்த லாரியின் ஓட்டுநர், அதனை சேலத்தில் விற்பனை செய்திட முயன்றபோது போலீசாரிடம் பிடிபட்டார். அப்போது, இந்த நூதன மோசடி அம்பலத்துக்கு வந்தது.

இது குறித்து தகவலறிந்த மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பண்டித கங்காதர், சம்பந்தப்பட்ட ஆய்வாளரை ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றி விசாரணை நடத்தி வருகிறார். இந்த மோசடி தொடர்பாக, லாரி ஓட்டுநர், உரிமையாளர், தரகர் உள்பட நான்கு பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.