தேங்காய் எண்ணெய் தலை சூட்டை தடுக்கும் ! உடல்சூட்டையே தணிக்கும் நல்லெண்ணெயின் மருத்துவ குணம் !

 

தேங்காய் எண்ணெய் தலை சூட்டை தடுக்கும் ! உடல்சூட்டையே தணிக்கும் நல்லெண்ணெயின் மருத்துவ குணம் !

நல்லெண்ணெய் நாள்தோறும் இரண்டு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் உடல் நலம் சீராகும். வாரத்தில் ஒருநாள் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு குறையும். கண் எரிச்சல், தலைவலி, உடம்பு வலி ஏற்படாது.

தேங்காய் எண்ணெய்க்கு அதிக முக்கியத்துவம் தரும் நீங்கள் நல்லெண்ணெயால் உள்ள மருத்துவ குணங்களையும் கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டும்.

பொதுவாக காலையில் வெளியில் செல்லும்போது தேங்காய் எண்ணெய்க்குதான் அதிக முக்கியத்துவம் கொடுப்போம். ஏனெனில் வெயிலில் சென்றால் குளிர்ச்சியாக இருக்கும். மேலும் முடிக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்பதால் தேங்காய் எண்ணெயின் பலன் நாம் அனைவரும் அறிந்ததே.

Cocunut oil

அதே சமயம் நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள் என்னவென்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்க்க நல்லெண்ணை ஒன்றே போதுமானது. நல்லெண்ணெய் நாள்தோறும் இரண்டு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் உடல் நலம் சீராகும். வாரத்தில் ஒருநாள் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு குறையும். கண் எரிச்சல், தலைவலி, உடம்பு வலி ஏற்படாது.

கம்ப்யூட்டர் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் எல்இடி, எல்சிடி திரைக்கு முன்னால் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், தினமும் நல்லெண்ணெய் சாப்பிட வேண்டும். நீங்கள் கட்டாயம் எண்ணெய் குளியல் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் கணினியில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க முடியும். உடல் சூட்டால் ஏற்படும் கட்டிகளை சரி செய்ய முட்டையின் வெள்ளைக் கருவுடன் நல்லெண்ணெய் சேர்த்து கட்டியின் மேல் வைத்தால் குணமடையும். நல்லெண்ணெய் வாயில் ஊற்றி கொப்பளித்து வந்தால் பற்கள் பளிச்சென்று நிறமாக இருக்கும் மற்றும் பற்கள் பலமடையும். மூட்டு வலி, உடம்பு வலி உள்ளவர்கள் தினமும் நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

oil bath

தைராய்டு உள்ளவர்கள் ஆயில் புல்லிங் செய்தால் குணமாகும். வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் மேற்கொண்டால் முடியில் உள்ள வறட்சி தன்மை நீங்கும். புத்தி கூர்மையாகும். உடல் பூரிப்பு, வலிமை, கண் பிரச்சனை போன்ற பல பிரச்சனைகளும் சரியாகிவிடும்.