தெளிவற்ற நாம் தமிழர் கட்சி சின்னம்; தேர்தல் ஆணையத்தை சாடும் நெட்டிசன்கள்

 

தெளிவற்ற நாம் தமிழர் கட்சி சின்னம்; தேர்தல் ஆணையத்தை சாடும் நெட்டிசன்கள்

சுயேட்சை வேட்பாளர் ஜெபமணி மோகன்ராஜ் என்பவரிடம் பொய்யான ஆவணங்களை பெற்றுக்கொண்டு சின்னம் வழங்கியது, சின்னம் வழங்குவதில் குறிப்பிட்ட கட்சிகளுக்கு பாரபட்சம் காட்டியது என தேர்தல் ஆணையத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது

மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் வருவதையொட்டி அரசியல் கட்சிகள் பிரசார வேலைகளில் பிஸியாக இருக்கின்றன. தேர்தல் ஆணையம் ஒருபுறம் தேர்தலுக்கான பணிகளை விரைவாக கவனித்து வருகிறது. சமீபமாக தேர்தல் ஆணையத்தின் மீது எக்கச்சக்கமான புகார்கள் எழுந்து வருகிறது.

hhd

சுயேட்சை வேட்பாளர் ஜெபமணி மோகன்ராஜ் என்பவரிடம் பொய்யான ஆவணங்களை பெற்றுக்கொண்டு சின்னம் வழங்கியது, சின்னம் வழங்குவதில் குறிப்பிட்ட கட்சிகளுக்கு பாரபட்சம் காட்டியது என தேர்தல் ஆணையத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில் வாக்கு பதிவு இயந்திரத்தில் ஒரு தவறு ஏற்பட்டுள்ளது என சமூக வலைதளங்களில் தேர்தல் ஆணையத்தை விமர்சித்து வருகின்றனர்.

DSFsff

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு இயந்திரத்தில் நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னம் மட்டும் ஒழுங்காய் தெரியவில்லை, மற்ற கட்சிகள் அனைத்துக்கும் தெளிவாய் தெரிவது போல் அமைந்துள்ளது.பாஜக, அதிமுகவுக்கு சாதகமாய் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்ற விமர்சனம் எழுந்து வரும் வேளையில், அதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் வகையில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை உள்ளது.

ஏன் நாம் தமிழர் கட்சி சின்னம்

தமிழகத்தில் பாஜக வேரூன்றக் கூடாது என தீவிரமாக விமர்சிக்கும் கட்சிகளில் நாம் தமிழர் கட்சியும் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மோடியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். எனவே நாம் தமிழர் கட்சியின் சின்னத்தை தேர்தல் ஆணையம் திட்டமிட்டே தெளிவற்ற நிலையில் அச்சடித்திருப்பதாக தெரிகிறது.

afsfsf

சமூக வலைதளங்களில் தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மக்களுக்கு தேர்தல் ஆணையத்தின் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

 

இதையும் வாசிங்க

காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் கமல் பட நாயகி: வெற்றி வாய்ப்பு கிட்டுமா? 

தி.மு.க கூட்டணி தோல்வியை அடையும்: மு.க.அழகிரி உறுதி ; கடுப்பான தி.மு.க.வினர்!

ஊழல் செய்தால் விஷ ஊசி போட்டு கொன்று விடுவேன்: சீமான் விமர்சனம்