தெளிவற்ற சின்னம்; உச்ச நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி மனு!

 

தெளிவற்ற சின்னம்; உச்ச நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி மனு!

வேட்பாளர்களை அறிவித்து, சின்னங்களை பெற்று அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று முடிந்துள்ளது

புதுதில்லி: வாக்குப்பதிவு இயந்திரத்தில் தெளிவற்ற நிலையில் சின்னம் அச்சடிக்கப்பத்ட் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நாம தமிழர் கட்சி மனுத் தாக்கல் செய்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 (இன்று) முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தமிழகத்தை பொறுத்தவரை 22 தொகுதிகளுக்குமான சட்டப்பேரவை தேர்தலும் இதனுடன் சேர்த்து நடைபெறவுள்ளது.

வேட்பாளர்களை அறிவித்து, சின்னங்களை பெற்று அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று முடிந்துள்ளது.

sugarcane farmer

இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் வருகிறது. வருகிற 18-ம் தேதி தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறவுள்ளது. இதனிடையே, புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களின் அளவை விட நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் சிறியதாகவும், தெளிவாக இல்லாமலும் உள்ளதாக புகார்கள் எழுந்தன.

sugarcane farmer

இதர வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களைப் போன்று தெளிவாக நாம தமிழர் கட்சியின் சின்னத்தையும் தெளிவாக பொருத்திட வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தி வந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் நாம் தமிழர் கட்சியின் ‘கரும்பு விவசாயி’ சின்னத்தை தெளிவாக புதிவு செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அக்கட்சி மனுத் தாக்கல் செய்துள்ளது.

இதையும் வாசிங்க

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2019; முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!