தெலுங்கில் வெளியாகிறது தாதா 87! உற்சாகத்தில் ரசிகர்கள்!

 

தெலுங்கில் வெளியாகிறது தாதா 87! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தாதா 87 திரைப்படம் தெலுங்கில் வெளியாகயுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை: தாதா 87 திரைப்படம் தெலுங்கில் வெளியாகயுள்ளதாக கூறப்படுகிறது.

கலை சினிமாஸ் தயாரிப்பில், விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி, ஸ்ரீ் பல்லவி நடிப்பில் வெளியான தாதா 87 திரைப்படம் மார்ச் 1 அன்று வெளியானது.  உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஒரு கதாநாயகி திருநங்கையாக நடித்தது என்ற சிறப்பைப் பெற்ற இப்படத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி, ஸ்ரீ பல்லவி என ஏராளமானோர் நடித்திருந்தனர்.

dha dha

தாதா 87 திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் இத்திரைப்படம் தமிழகத்தில்  முக்கியமான பகுதிகளில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் திரையிட முடியவில்லை.

dha dha

இந்நிலையில், தாதா 87 திரைப்படத்தைக் கோடை விடுமுறையில் மீண்டும் திரையிட்டு மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தை தெலுங்கில் ‘பவுடர்’ என்ற பெயரில் விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.