தெலுங்கில் ரீமேக்காக்கிறது சிவகார்த்திகேயனின் சூப்பர் ஹிட் திரைப்படம் 

 

தெலுங்கில் ரீமேக்காக்கிறது சிவகார்த்திகேயனின் சூப்பர் ஹிட் திரைப்படம் 

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் கனா. இப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியிருந்தார். பெண்கள் கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்டு உருவான இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும் சத்யராஜ், தர்ஷன் ஆகியோர் நடித்திருந்தனர்.

கடந்த வருடம் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார். 

அதில் அவர் கூறியதாவது, ‘இது என்னுடைய முதல் தெலுங்கு திரைப்படம் ‘கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி’. இந்த படத்தின் முதல்பார்வை நாளைமாலை 5 மணிக்கு  வெளியாகும். இப்படத்தை இயக்குநர் பீமனேனி ஸ்ரீநிவாஸ் இயக்குகிறார். மேலும் இது ‘கனா’ படத்தின் ரீமேக்’ என்று பதிவிட்டுள்ளார்.